Thursday, 7 January 2021

08/01/2021 ஜூம்ஆ குறிப்புகள்:- பேனுதலை கடைப்பிடிப்போம், பேரின்பத்தை பெற்றுக்கொள்வோம்


பேணுதலை கடைபிடிப்போம், பேரின்பத்தை பெற்றுகொள்வோம்


أخرجه الترمذي (2442) ، وأحمد (1630) ، وابن حبان (722) عن الحسن بن علي رضي الله عنهما قال : " حفظت من رسول الله صلى الله عليه وسلم : ( دَعْ مَا يَرِيبُكَ إِلَى مَا لَا يَرِيبُكَ .

எதில் உங்களுக்கு சந்தேகம் உள்ளதோ அதை [ பேணுதலுடன்] விட்டு விடுங்கள். எதில் சந்தேகம் இல்லையோ அதை எடுத்துக்கொள்ளுங்கள்.

ஒரு முஃமினின் வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் பேணுதலை கடைபிடிப்பதும், பேணுதலாக இருப்பதும் அவசியமான ஒன்று.

அமலில்(அதை முறையாக செய்வதில்) பேணுதல், உணவு உடைகளில் (ஹராமை விட்டு) பேணுதல், சக மனிதர்களின் உரிமைகளை கையாளும் விஷயத்தில் பேணுதல் என வாழக்கையின் ஒவ்வொரு அம்சங்களிலும் பேணுதலை கடைபிடிப்பது முஃமினான நமக்கு கடமை ஆகும்.

அவ்வாறு பேணுதலின்றி ,அல்லாஹ் வகுத்த வரைமுறைகளை சரியாக பேணாமல் தான்தோன்றி தனமாக வாழ்வது இம்மையிலும் மறுமையிலும் நமக்கு நஷ்டத்தையே பெற்று தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

வரலாற்றில் நம் மேன்மக்கள் கடைபிடித்த பேணுதலான வாழ்க்கையை பார்த்தால்,படித்தால் நம் வாழ்கையின் ஒவ்வொரு அம்சங்களும் தவறோ என்று நினைக்க தோன்றும் அளவு பேணுதலான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள்.

அப்படிபட்ட பேணுதலான வாழ்க்கையை தான் அவர்களுக்கு இவ்வுலகில் நற்பேறுகளையும் மறுமையின் நற்பேறுகளையும் பெற்றுக்கொடுத்தது.

قال ابن القيم رحمه الله :

والورع ترك ما يخشى ضرره في الآخرة

இப்னுல் கய்யூம்(ரஹ்) அவர்கள் சொல்வார்கள் :

 பேணுதல் என்பது மறுமையில் தீங்கு விளைவிக்கக்கூடிய ஒவ்வொன்றையும்  விடுவதாகும்.

ஆம் உண்மைதான் நாம் மறுமையின் சொந்தக்காரர்கள் இம்மையின் பேணுதலான வாழக்கையே மறுமையில் பேரின்பத்தை பெற்று தரும்.


அமலில் பேணுதல் வேண்டும்

ஒரு சமயம் நபிதோழர் ஒருவர், "தக்பீர் தஹ்ரீமா' முதல் தக்பீரை ஒரு வியாபார விஷயமாக இருந்த போது தவறவிட்டு, ஜமா அத் தொழுகையில் கலந்து கொண்டார்.

தொழுகை முடிந்தபின் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், ""பெருமானாரே! நான் தக்பீர் தஹ்ரீமாவை தவற விட்டுவிட்டேன். 

அதற்கு ஈடாக நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் நான்கு ஓட்டகைகளின் சாமான்களை ஈடாக கொடுப்பதால் தக்பீர் தஹ்ரீமாவின் நன்மை கிடைக்குமா?'' என்று வினவிய போது, 

திருநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ""நான்கு ஒட்டகைகளின் சாமான்கள் என்ன, நாற்பது ஒட்டகைகளின் சாமான்களை நீர் தருமமாகக் கொடுத்தாலும் தக்பீர் தஹ்ரீமாவுக்கு ஈடாகாது'' என்று கூறினார்கள்.

அமலில் பேணுதல் என்பது எவ்வளவு முக்கியம் என்பது இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துகிறது.

சின்ன விஷயம்தானே என்று நாம் பேணாத விஷயம் பின்னர் எவ்ளோ கோடி கொட்டி கொடுத்தாலும் அந்த சின்ன விஷயத்தின் உயர்ந்த நன்மையை அடைவது மிக கடினமே...


பைத்துல் மால் எனும் பொது நிதிகளை கையாளும் போது பேணுதல்


இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்.

(என் தந்தை) உமர் இப்னு கத்தாப்(ரலி) முதன் முதலாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களுக்கு (பொதுநிதியிலிருந்து) நான்காண்டுகளுக்கு நான்காயிரம் (திர்ஹம்) தீனார்) கொடுக்க வேண்டுமென நிர்ணயித்தார்கள். 

(தம் மகனான) எனக்கு மூவாயிரத்து ஐநூறு கொடுக்க வேண்டும் என நிர்ணயித்தார்கள்.

 அவர்களிடம், '(தங்கள் மகன்) இப்னு உமர் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களில் ஒருவர் தாமே! நான்காயிரம் கொடுக்காமல் அவருக்கு மட்டும் ஏன் குறைத்து நிர்ணயித்தீர்கள்?' என்று கேட்கப்பட்டது. 

அதற்கு அவர்கள், 'அவரை அழைத்துக் கொண்டு ஹிஜ்ரத் செய்து வந்ததெல்லாம் அவரின் தாய் தந்தையர் தாம்' என்று கூறினார்கள்.

'அவர் சுயமாக ஹிஜ்ரத் செய்து வந்தவர்களைப் போன்றவரல்லர்' என்றும் உமர்(ரலி) சொல்வார்கள்.

இன்று பொது சொத்துகளை கையாள்பவர்கள் தங்களுக்கும் ,தங்களை சர்ந்தவர்களுக்கும் போக மீதியே பொது சொத்தென எண்ணுகிறார்கள்..

அதில் பேணுதலை கையாள்வது என்பது மிக அவசியம்...

இந்த சம்பவத்தில் நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது .

நமக்கு இவ்விடத்தில் பெற வேண்டியது

நாட்டின் ஜனாதிபதி, அமீருல் முஃமினின் பல மைல் சதுர பரப்பளவின் நீதமிகு ஆட்சியாளர் ஒரு இடம் பெறும் விஷயத்தில் எவ்வளவு பேணுதலை கடைபிடித்துள்ளார்கள்..

இன்று சாதாரண பதவியோ பணபலமோ, ஆள் அதிகாரமோ கிடைத்தால் அவர் சொல்வதுதான் சட்டம், அவர் தேர்வு செய்வதுதான் அவர் இடம் என்ற அளவில் நம் சமுதாய மக்களிடையே பேணுதலை பற்றி உண்டான எந்த கவலையும் இல்லாமல் வாழ்கிறோமே...

சிந்திக்க கடைப்பட்டுள்ளோம்.


உணவில் பேணுதலாக இருந்த உயர்ந்த உத்தமர்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

ஹஜ்ரத் அபூபக்கர்(ரலி) அவர்களுக்கு ஓர் அடிமை இருந்தார் அவர் எப்பொழுதும் ஏதாவது உணவு கொண்டு வந்தால் அதை முதலில் தன் எஜமானரான ஹஜ்ரத் அபூ பக்கர் (ரலி) அவர்களுக்கு கொடுத்து விட்டு சாப்பிடுவார்.

 ஒரு நாள் அந்த அடிமை ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தார்.

அதிலிருந்து அபூபக்கர்(ரலி) சிறிது உண்டார்கள்.

 அப்போது அந்த அடிமை அவர்களிடம்,

எப்பொழுதும்உணவு கொடுக்கப்பட்டால் விசாரிப்பீர்கள். இன்று எதுவும் விசாரிக்காமல் சாப்பிட்டிர்களே என்று கேட்டார்.

 'பிறகு இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டார்

ஹஜ்ரத் அபூ பக்கர்(ரலி), 'இது என்ன?' என்று கேட்டார்கள். அவன், 'நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லிவந்தேன்; எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது; ஆயினும் (குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து) அவரை நான் ஏமாற்றி விட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்து தான்" என்று சொன்னார்.

 உடனே ஹஜ்ரத் அபூ பக்கர்(ரலி) தம் கையை (வாய்க்குள்) நுழைத்துத் தம் வயிற்றிலிருந்து அனைத்தையும் வாந்தியெடுத்துவிட்டார்கள். வாந்தியெடுத்த பிறகு கூறினார்கள். யாஅல்லாஹ் இதையும் தாண்டி என் குடலுக்குள் அதனுடைய சாறு கலந்திருந்தால் என்னை மன்னிப்பாயாக. இந்த செய்தியை நபியிடம் சொன்னபோது உண்மையாளரின் வயிற்றுக்குள் தூய்மையான உணவைத்தவிர வேரெதுவும் செல்ல முடியாது என்று கூறினார்கள்.

ஆதாரம்;புஹாரி எண் 3842.மற்றும்.இஹ்யா உலூமித்தீன்.பாகம்.2.

ஒரு கவலம் உள்ளே சென்றாலும் அது ஹலால் ஆன முறையில் செல்ல வேண்டும் என்ற பேணுதலும், ஹராமில் வளர்க்கப்பட்ட ஒரு சதையாக இருந்தாலும் அது நரகத்திற்கு சொந்தம் என்ற பயமும் அவர்களுக்குள்ளே இருந்த ஈமானின் அடையாளங்கள்.

மனிதன் நிரப்புகிற பாத்திரத்தில் மிக கெட்ட பாத்திரம் "வயிறு"  என்று சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.

ஆகவே அந்த வயிற்றை நிரப்ப உதவும் உணவுகளில் நாம் பேணுதலாக இருப்பது மிக அவசியம்.


பேணுதலை பேணிய அமீருல் முஃமினீன்

ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மரண நேரத்தில் தன் மகனார் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்களை அழைத்து,

 அன்னை ஆயிஷா அவர்களிடம் நீ சென்று, 'உமர் உங்களுக்கு சலாம் கூறுகிறார்' என்று கூறு.

அமீருல் முஃமினின் என்று (என்னைப் பற்றிக்) கூறாதே. ஏனெனில், நான் இன்று (முதல்) விசுவாசிகளுக்கு (ஆட்சித்) தலைவனல்லன்.

 மேலும், (அன்னை ஆயிஷா - ரலி - அவர்களிடம்) 'உமர் தம் இரண்டு தோழர்கள் (நபி - ஸல் - மற்றும் அபூ பக்கர் - ரலி - அடக்கம் செய்யப்பட்டுள்ள உங்களின் அறையில் அவர்கள்) உடன் தம்மையும் அடக்கம் செய்வதற்கு (உங்களிடத்தில்) அனுமதி கோருகிறார்' என்று சொல்' எனக் கூறினார்கள்.

 ஆயிஷா(ரலி) அவர்களிடம் உமர்(ரலி) அவர்களின் புதல்வர் சென்று சலாம் கூறி, (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்ட பிறகு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது ஆயிஷா(ரலி) (உமர் - ரலி அவர்கள் குத்தப்பட்ட செய்தியறிந்து) அழுது கொண்டு அமர்ந்திருப்பதைக் கண்டார். அப்போது, அவர்களைப் பார்த்து, '(என் தந்தை) உமர் இப்னு கத்தாப் தங்களுக்கு சலாம் கூறுகிறார்.

தம் இரண்டு தோழர்களுடன் தம்மையும் அடக்கம் செய்வதற்குத் தங்களிடம் அனுமதி கேட்கிறார்' என்று கூறினார். அப்போது ஆயிஷா(ரலி), 'எனக்காக அ(ந்த இடத்)தை (ஒதுக்கிக் கொள்ள) நான் நினைத்திருந்தேன்.

 (இப்போது அங்கு அடக்கம் செய்யப்படுவதற்கு) என்னை விட அவருக்கே முதலிடம் கொடுத்து விட்டேன். (அவரையே அந்த இடத்தில் அடக்கிக் கொள்ளுங்கள்)' என்று கூறினார்கள். பிறகு அவர் (உமர் - ரலி - அவர்களிடம்) திரும்பி வந்தபோது, 'இதோ, உமர் அவர்களின் மகன் அப்துல்லாஹ் வந்துவிட்டார்' என்று கூறப்பட்டது.

 (ஒருக்களித்துப் படுத்திருந்த) உமர்(ரலி), 'என்னைத் தூக்கி உட்கார வையுங்கள்' என்று கூறினார்கள். 

அப்போது (அங்கிருந்த) ஒருவர் தன்னோடு அவர்களை அணைத்துக் கொண்டு சாய்த்து அமர்த்தினார். அப்போது உமர்(ரலி) (தம் மகனை நோக்கி), 'உன்னிடம் என்ன (பதில்) உள்ளது?' என்று கேட்டார்கள். 'நீங்கள் விரும்பியது தான், அமீருல் முஃமினின் அவர்களே அன்னை ஆயிஷா (ரலி) அனுமதித்துவிட்டார்கள்' என்று அப்துல்லாஹ் இப்னு உமர் ரலி அவர்கள் கூறினார்கள். 

(அப்போது) 'எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இதுதான் எனக்கு கவலையளித்துக் கொண்டிருந்தது. (இப்போது என் ஆசை நிறைவேறிவிட்டது.) 

நான் இறந்துவிட்டால் என்னைச் சுமந்து (என்னை அடக்கம் செய்யும் அந்த அறைக்குக்) கொண்டு செல்லுங்கள்.

 பிறகு, ஆயிஷா அவர்களக்கு நீ சலாம் சொல்லி, (அவர்களிடம்) உமர் இப்னு கத்தாப் தம் இருதோழர்களுக்கு அருகில் தம்மை அடக்கம் செய்வதற்குத் தங்களிடத்தில் அனுமதி கேட்கிறார்' என்று (மீண்டும் ஒரு முறை) சொல். 

அவர்கள் அனுமதித்தால், 

என்னை (அந்த அறைக்கு) உள்ளே கொண்டு செல்லுங்கள். அவர்கள் (அனுமதி தர) மறுத்தால் என்னை (மற்ற) முஸ்லிம்களின் (மண்ணறைகள் அமைந்திருக்கும் பொது) அடக்கலத்திற்குத் திருப்பிக் கொண்டு சென்று விடுங்கள்' என்று கூறினார்கள்.

பின்னர் அவர்கள் அன்னை ஆயிஷா ரலி அவர்கள் வீட்டிலே நபியவர்களுக்கும் அபூபக்கர் சித்தீக் ரலி அவர்களுக்கும் அருகாமையில் அடக்கம் செய்யப்பட்டார்கள் என்பது வரலாறு..

இந்த சம்பவத்தில் நமக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளது .

நமக்கு இவ்விடத்தில் பெற வேண்டியது

நாட்டின் ஜனாதிபதி, அமீருல் முஃமினின் பல மைல் சதுர பரப்பளவின் நீதமிகு ஆட்சியாளர் ஒரு இடம் பெறும் விஷயத்தில் எவ்வளவு பேணுதலை கடைபிடித்துள்ளார்கள்..

இன்று சாதாரண பதவியோ பணபலமோ, ஆள் அதிகாரமோ கிடைத்தால் அவர் சொல்வதுதான் சட்டம், அவர் தேர்வு செய்வதுதான் அவர் இடம் என்ற அளவில் நம் சமுதாய மக்களிடையே பேணுதலை பற்றி உண்டான எந்த கவலையும் இல்லாமல் வாழ்கிறோமே...

சிந்திக்க கடைப்பட்டுள்ளோம்.


பிள்ளைகளின் வளர்ப்பில் பேணுதலை வளர்த்த சஹாபி

ஹழ்ரத் அபூதுஜானா (ரலி) அவர்கள்  பஜ்ர் தொழுதவுடன் தமது வீட்டிற்கு சென்று விடுவார்கள்.இதைக் கவனித்து வந்த நபி (ஸல்) அவர்கள் அபூதுஜானவை அழைத்து “உமக்கு இறைவனின் எந்தத் தேவையும் இல்லையா? என்று கேட்பார்கள்.

அதற்கவர் “யாரசூலல்லாஹ் இறைவனிடம் எனக்கு நிரம்ப தேவைகள் இருக்கிறது” என்றார். 

அப்படியானால் உமது தேவைகளை இறைவனிடமிருந்து கேட்டுவிட்டு போகாமல், தொழுதவுடன் வீட்டிற்கு சென்று விடுகிறீரே! என்று நபியவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அபூதுஜானா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

“யாரசூலல்லாஹ் ! என்னுடைய வீட்டுக்கு அடுத்த வீட்டில் ஒரு பேரீத்த மரம் நிற்கிறது. 

அந்த மரத்தின் கிளைகள் என் வீட்டு முற்றத்தில் படர்ந்து நிர்ப்பதால், அதன் பழங்கள் என் வீட்டில் உதிர்ந்து விடுகிறது. 

அவைகளை என்னுடைய பிள்ளைகள் எடுத்து புசித்து விடுகிறார்கள். அது அன்னியன் உடமை, அவைகளை என் குழந்தைகள் சாப்பிட்டு விடுவதால் ஹராமான (விலக்கப்பட்ட) பொருளை உண்டவர்களாகி விடுகிறார்கள். ஆதலால் நான் தொழுதவுடன் வீட்டிற்க்குச் சென்று என் பிள்ளைகள் கண் விழிப்பதற்கு முன் அப்பழங்களை எடுத்து அவர் வீட்டில் போட வேண்டியதாயிருக்கிறது: அதனால்தான் நான் ஜமாஅத் தொழுகை முடிந்தவுடன் வீட்டிற்க்குச் சென்று விடுகிறேன் என்றார்கள்.

ஹழ்ரத் அபூதுஜானா (ரலி) அவர்களின் நேர்மையையும், பேணுதலையும் கண்ட நபி (ஸல்) அவர்கள் இதற்கொரு சரியான பரிகாரம் காண முயற்சித்தார்கள். அந்த மரம் இருந்ததோ ஒரு “முனாபிக்” (முஸ்லிமை போல் நடிக்ககூடியவர்) வுடைய வீட்டில். இறுதியில் அந்த மரத்தை அபூதுஜானாவுக்கே சொந்தப் படுத்திக் கொடுத்துவிட முடிவு செய்யப்பட்டது.

நபி (ஸல்)அவர்கள் ஒரு ஸஹாபியை மரச் சொந்தக்காரரிடம் அனுப்பி, அடுத்த வீட்டுக்காரார் அபுதுஜானாவுக்கு மரத்தை விற்றுவிடும்படி சொல்லுங்கள் என அனுப்பினார்கள். 

அதற்கு அந்த முனாபிக் முடியாது என்று சொல்லிவிட்டார்.

 இரண்டாவது தடவை நபியவர்கள் தங்களுக்கே விலைக்கு தரும்படி கேட்டனுப்பினார்கள். அதற்கும் அந்த முனாபிக் முடியாது என சொல்லிவிட்டார். 

மூன்றாவது தடவையாக சுவர்க்கத்தின் ஒரு மரத்திற்கு பகரமாக தரும்படி கேட்டனுப்பினார்கள். அதற்கும் முடியாது என்றே பதில் வந்தது. 

கடைசியாக மதினாவில் பத்துக்கும் மேற்பட்ட மரங்களைக் கொண்ட ஒரு தோட்டத்திற்கு பகரமாக அவர் வீட்டு முற்றத்தில் நிற்கக்கூடிய அந்த ஒரு மரத்தை மட்டும் தரும்படி கேட்டனுப்பினார்கள்.

பேராசைக்கொண்ட அந்த முனாபிக் “ஒரு மரத்திற்குப் பதில் பத்து மரங்கள் கிடைக்கிறது. இந்த ஒரு மரமும் நமது வீட்டில்தான் நிற்கிறது. எனவே இரவோடு இரவாக வீட்டிலுள்ள மரத்தின் கனிகளையும் நாமே பரித்துகொள்ளலாம். வெளியுலுள்ள மரங்களின் கனிகளும் நமக்கு கிடைக்கும்”. என்று தம் மனதிற்குள் நினைத்தபடி நபியவர்களின் கடைசி கோரிக்கைக்கு இணங்கினார். ஒப்பந்தப்படி தம் வீட்டு முற்றத்திலுள்ள மரத்தை அபூதுஜனாவுக்கே விற்று விட்டார். 

அடுத்த நாள் காலையில் மரம் அபூதுஜானவுடைய வீட்டு முற்றத்தில் நிற்பதைக் கண்டு முனாபிக் திடுக்கிட்டார். (நூல்:தப்ஸீருல் பஹவி)

இச்சம்பவத்தில், ஒரு தந்தை தன் பிள்ளைகளுடைய வளர்ப்பில் ஹலால் எது? ஹராம் எது? என்று பேணுதலோடு வாழ   சொல்லிக்கொடுத்து வளர்த்து வந்தார்கள் என்று தெரிய வருகிறது

ஆக பேணுதலை வளர்க்க பேணுதலான வாழ்க்கையை வாழ அவர்கள் எடுத்து கொண்ட சிரமங்களும் சீரான நடைமுறைகளும் எப்படிப்பட்டது என்பது மேற்காணும் சம்பவங்கள் நமக்கு அழகான எடுத்துக்காட்டுகள்.

ஆக பேணுதலான வாழ்க்கையை வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் பேரின்பத்தை பெரும் நன்மக்களாக நம் அனைவரையும் வல்ல ரஹ்மான் ஆக்கி அருள்புரிவானாக..

ஆமீன்..

Thursday, 31 December 2020

01/01/2021 ஜூம்ஆ குறிப்புகள். சொந்தத்தை பேணுவோம், சொர்க்கத்தை பெறுவோம்

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌ وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌ اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏ மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் : 4:36) وعن عليٍّ ـ رضي الله عنه ـ عن النبي صلى الله عليه وسلم تعلَّموا من أنسابِكم ما تصِلُون به أرحامَكم؛ فإن صِلَة الرَّحِم محبَّةٌ في الأهل، مثْرَاةٌ في المال، منسَأةٌ في الأثَر. இஸ்லாம் வலியுறுத்தும் சமூக உறவுடன் சம்பந்தப்பட்ட இபாதத்துக்களில் குடும்ப உறவைப் பேணுவது மிக முக்கியமானதாகும். சமூக உருவாக்கம் எனும் இஸ்லாமிய இலட்சியத்தை அடைய குடும்ப உறவு சீர்படுதல் இன்றியமையாததாகும். இவ் வகையில் நல்ல சமூக மாற்றத்தை ஏற்படுத்த நல்ல குடும்ப உறவுகளை ஏற்படுத்த வேண்டும். நட்பும் ஏனைய உறவுகளும், நாமாகத் தேர்வு செய்பவையாகும். இரத்த உறவு அல்லாஹ்வின் தேர்வாகும். இவர் உன் வாப்பா, இவர் உன் சாச்சா, இவர் உன் மாமா, இவர் உன் சகோதரர் என்பது அல்லாஹ் செய்த தேர்வாகும். இந்தத் தேர்வுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மார்க்கக் கடமையாகும். இரத்த உறவைப்பேணுவது வெறும் சமூகக் கட்டமைப்பிற்காக மட்டும் அவசிய மானதல்ல. இஸ்லாமிய நோக்கில் இது ஈமானின் அம்சங்களில் ஒன்றாகும். “யார் அல்லாஹ்வையும், மறுமை நாளையும், ஈமான் கொள்கின்றாரோ அவர் குடும்ப உறவைச் சேர்ந்து நடக்கட்டும்” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம் அல்லாஹ்வின் மீதும் மறுமையின் மீதும் ஒரு முஸ்லிம் கொண்டுள்ள ஈமானின் வெளிப்பாடுகளில் ஒன்றாகக் குடும்ப உறவைப் பேணி நடத்தலும் அமைந்துள்ளது. எனவே, குடும்ப உறவைப் பேணி பாதுகாத்து நடப்பதே முஃமினின் பண்பாடு.

அர்ஷோடு இணைந்திருக்கும் சொந்தம்

وصلة الرحم في سنة النبي صلى الله عليه وسلم أمر واجب، وقاطعها آثم؛ فعن عائشة -رضي الله عنها- قالت: قال رسول الله صلى الله عليه وسلم: "الرحم معلقة بالعرش تقول: من وصلني وصله الله، ومن قطعني قطعه الله" _இரத்த உறவு (சொந்தம்)அர்ஷில் கொழுகப் பட்டுள்ளது. அது யார் என்னைச் சேர்ந்து நடக்கிறானோ அல்லாஹ் அவனைச் சேர்ந்து கொள்வான். யார் என்னைத் துண்டித்து நடக்கின்றானோ, அல்லாஹ் அவனைத் துண்டித்து விடுவான்” எனக் கூறும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்._ அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.


 ரிஜ்க்கும்,ஆயுலும் அதிகரிக்க 

وبيَّنن النبي صلى الله عليه وسلم أن صلة الرحم من أسباب طول العمر وزيادة الرزق، فقال: "من سرَّه أن يُبْسط له في رزقه، وأن يُنسأ له في أثره (يؤخر له في عمره) فليصل رحمه" _“யார் தனக்கு ரிஜ்கில் விஸ்தீரணத்தையும் நீண்ட ஆயுளையும் விரும்புகின்றாரோ அவர் அவர் இரத்த உறவைப் (சொந்த பந்துகளை) பேணிக்கொள்ளட்டும்._ அறிவிப்பவர் : அனஸ்(ரலி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம்.


 அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட

 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : ( إِنَّ أَعْمَالَ بَنِي آدَمَ تُعْرَضُ كُلَّ خَمِيسٍ لَيْلَةَ الْجُمُعَةِ فَلَا يُقْبَلُ عَمَلُ قَاطِعِ رَحِمٍ ) رواه أحمد في " مسنده " ( 16 / 191) ஆதமுடைய மக்களின் நல்லமல்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை வெள்ளி இரவில் எடுத்துக்காட்டப்படுகின்றன. இரத்த உறவைத் துண்டித்து வாழ்ந்தவரின் நல்லமல்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (முஸ்னத் அஹ்மத் – 10272) 


 நபியவர்களின் பண்புகளில் சொந்தங்களை பேணுதல்

நபித்துவம் கொடுக்கப்படுவதற்கு முன்பு நபிகளாரின் குணங்களில் ஒன்று உறவுகளை அரவணைப்பது நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வஹீ வந்தபோது பயந்தவர்களாக கதீஜா (ரலி) அவர்களிடம் வந்த போது ஆறுதல் வார்த்தையாக சொல்லும்போது கூறிய வார்த்தை ஞாபகம் கொள்ள வேண்டும். فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الْخَبَرَ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ (அச்சத்தால்) இதயம் படபடக்க அந்த வசனங்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்திவிடுங்கள் எனக்குப் போர்த்திவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே அன்னை அவர்கள் நபி அவர்களுக்குப் போர்த்திட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றை தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள் அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை 

அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்ந்துவருகிறீர்கள்

(சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்;விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)” என்று (ஆறுதல்) சொன்னார்கள் நூல் : புகாரீ இன்னொரு விஷயம் உறவினர்களை சேர்த்து வாழ்பவர்களை அல்லாஹ் கேவலப்படுத்த மாட்டான் என்பது இந்த சம்பவம் மூலம் உறுதியாகிறது..


இஸ்லாத்தின் ஆரம்ப நேரத்தில் மக்களுக்கு தீனை எத்தி வைக்கும்போது நபி அவர்களின் உபதேசங்களில்

 நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் கொடுத்து அனுப்பப்பட்டதும் சொந்தபந்தங்களை அரவணைக்க வேண்டும், அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும் என்பதைத்தான் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள் قَالَ مَاذَا يَأْمُرُكُمْ قُلْتُ يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ وَيَأْمُرُنَا بِالصَّلاَةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ . அபீசீனியாவில் ஹிர்கல் மன்னர் தன்னுடைய நாட்டிற்கு வந்த முஸ்லிம்களிடம் நபிகளாரின் நபித்துவத்தைப் பற்றியும்,அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றியும் கேட்கும்போது, அவர் உங்களுக்கு என்ன செய்யும்படி கட்டளையிடுகிறார்? என்று கேட்டார். அதற்கு முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு எதனையும் யாரையும் இணையாக்காதீர்கள். உங்கள் மூதாதையர் சொல்லிவருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகின்றார். தொழுகையை நிறைவேற்றும்படியும்,ஸகாத் கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும்,தன்மானத்துடன் வாழும் படியும், 

உறவுகளைப் பேணி வாழும் படியும்

எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன் என அபு சுஃப்யான் அவர்கள் கூறினார்கள். நூல் : புகாரி.


நபி அவர்களை நாம் உறவு முறைகளில் எந்த ரோல்மாடலில் எடுத்து கொண்டாலும் அத்தனையிலும் அவர்களை அழகான வழிகாட்டியாகவே நாம் பெற்றுக்கொள்வோம்.

நபியவர்கள் ஒரு சம்மந்தியாக எப்படி நடந்து கொண்டார்கள்.

மருமகனார் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் தாயார் பாத்திமா பிந்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள்தான் நபியவர்களுக்கு சின்னம்மா முறையும் சம்மந்தி முறையும் கூட... நபியவர்களை அவர்களின் குடும்பத்தில் எல்லா உறவு முறையில் உள்ளவர்களும் நபியை தந்தையாக, கணவராக, மாமனாராக, பார்த்ததை விட அவர்களை நபியாக, ரஸூலாக பார்த்த தருணங்களே அதிகம். அப்படி இருந்தும் கூட நபியவர்கள் சொந்த பந்தங்களை பேணி பாதுகாத்த முறை அவர்கள் அனைத்திலும் ஓரு உன்னத முன்மாதிரி என்பதற்கு சான்று.. பாத்திமா பிந்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா ஹிஜ்ரத்துக்கு முன்னர் இஸ்லாத்தை ஏற்று மதீனாவுக்கு ஹிஜ்ரத் பயணமும் மேற் கொண்டு அங்கேயே மரணமடைந்தார்கள். கஃபன் துணிக்கு நபியவர்கள் தமது முபாரக்கான சட்டையால் போர்த்தி நபி(ஸல்)அவர்கள் ஜன்னத்துல் பகீயில் நல்லடக்கம் செய்தார்கள். பெருமானார்(ஸல்) அவர்கள் கப்ரில் இறங்கி அடக்கம் செய்த ஐவரில் இவர்களும் ஒருவர். (ஆதாரம்: உஸ்துல் காபத்) இங்கே நமக்கு இது செய்தியாக இருக்கலாம். ஆனால் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலி (ரலி) அன்ஹு அவர்களின் மாமனாராக தன் சம்மந்திக்கு செய்ய வேண்டிய ஹக்கை செய்தார்கள். தன்னிடம் இருந்த முபாரக்கான ஆடையை கொடுத்து சம்மந்தியை கண்ணியபடுத்தினார்கள். எத்தனையோ ஸஹாபாக்கள் நபியின் துணி என் கஃபனாக இருக்க வேண்டுமே என்ற ஆவல் கொண்டார்கள்.. அவர்களுக்கு கிடைக்காத பாக்கியம் அலி (ரலி) அவர்களின் தாயார் பாத்திமா பிந்த் அஸத் ரலியல்லாஹு அன்ஹா அவர்ககுக்கு கிடைத்தது. நபியே தொழ வைத்து ,நபியே கப்ரில் இறங்கி தன் முபாரக்கான கரங்களால் நல்லடக்கம் செய்தார்கள். நபியவர்கள் தன் உரிமையை சம்மந்தியாக மிக சரியாக நிறைவேற்றினார்கள். *மிஸ்ர் நாட்டுடன் நபிக்கு இருந்த உறவு* இஸ்லாம் என்பது விசாலமான மார்க்கம் ஆகும். அதை போன்று உறவினர்களை அனுசரிப்பதில், அந்த உறவை பாதுகாப்பதில் விசாலமான இடத்தை இஸ்லாம் கொடுக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் வந்த உறவுகளை அல்ல, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட உறவுக்கும் முக்கியத்துவம் கொடுக்க சொல்கிறது. عن أبي ذر. قال: قال رسول الله صلى الله عليه وسلم “إنكم ستفتحون مصر. وهي أرض يسمى فيها القيراط. فإذا فتحتموها فأحسنوا إلى أهلها. فإن لهم ذمة ورحما” أو قال “ذمة وصهرا. فإذا رأيت رجلين يختصمان فيها في موضع لبنة، فاخرج منها” قال: فرأيت عبدالرحمن بن شرحبيل بن حسنة وأخاه ربيعة، يختصمان في موضع لبنة، فخرجت منها.(رواه مسلم ٢٥٤٣) அபூதர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், "நீங்கள் விரைவில் மிஸ்ர் தேசத்தை வெற்றிக் கொள்வீர்கள். அது கீராத் என்று சொல்லப்படக்கூடிய (வஸ்து உள்ள) பூமியாகும். அதை வெற்றிக் கொண்டால், அந்த மக்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக அவர்களுக்கு ஒப்பந்தம் இன்னும் உறவு இருக்கிறது". (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன வார்த்தை சொன்னார்கள் என்பதை அறிவிப்பாளர் மறந்து விட்டார்) அல்லது ஒப்பந்தம் இன்னும் பந்தம் இருக்கிறது என்றார்கள். மேலும் ஒரு செங்கல் அளவுள்ள இடத்திற்கு இரு மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்வதை நீ கண்டால், மிஸ்ர் நாட்டை விட்டும் வெளியேறி விடு என்றார்கள். (அறிவிப்பாளர்) சொல்கிறார்கள், நான் ஷுரஹ்பீல் இப்னு ஹஸனா இன்னும் அவருடைய சகோதரர் ரபீஆ இருவரும் ஒரு செங்கல் அளவுள்ள இடத்திற்கு சண்டையிட்டுக் கொண்டார்கள். எனவே அதில் (மிஸ்ரில்) இருந்து வெளியேறிவிட்டேன். (நூல்:முஸ்லிம் 2543) மிஸ்ர் நாட்டில் நபிக்கு என்ன உறவு இருந்ததென்றால், ஒன்று ஹாஜரா (அலை) அவர்களின் மூலமாக. அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் பாட்டனார் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஆவார்கள். இன்னொன்று மாரியா கிப்தியா (ரழி) அவர்கள் மூலமாக. இவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்களின் மகன் இப்ராஹீம் அவர்களின் தாயார் ஆவார். இருவரும் மிஸ்ர் நாட்டை சார்ந்தவர்கள். இந்த உறவின் காரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிஸ்ர் நாட்டு மக்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள சொன்னார்கள். நாம் நம்முடைய உறவுகளிடம் எப்படி நடந்து கொள்கிறோம். கண்ணை விட்டும் தூரமான உறவுகளுடன் அல்ல, கண்ணுக்கு முன் உள்ள உறவினர்களுடன் எப்படி நடந்து கொள்கிறோம். 

பாவங்கள் மன்னிக்கப்படுவதர்க்கு சிறந்த வழி

أن رجلاً أتى النبي صلى الله عليه وآله وسلم فقال: "يا رسولَ اللَّهِ إنِّي أصَبتُ ذنبًا عظيمًا، فهل لي من توبة؟ فقال: «هل لك من أم؟» قال: لا، قال: «فهل لك من خالة؟»، قال: نعم، قال: «فبرها»" (صحيح الترمذي:1904). ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , யாரசூலல்லாஹ் நான் பெரிய பாவம் செய்து விட்டேன் எனக்கு பாவமன்னிப்பு (தவ்பாவுக்கான வழிகள்) உண்டா என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள், உமக்கு தாயார் இருக்கிறாரா எனக்கேட்டார்கள். அதற்கு அம்மனிதர் இல்லை என்று சொல்ல, உன் தாயோடு பிறந்த தாயின் சகோதரிகள் யாரேணும் இருக்கிரார்களா என்று கேட்டாரகள். அதற்கு அம்மனிதர் ஆம் என கூறினார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களோடு நல்ல முறையில் நடந்து கொள் என கூறி அனுப்பினார்கள். பெரிய எதிர்பார்ப்போடு நாம் செய்த பாவத்திற்கு ஏதேனும் பெரிய பரிகாரமான அமல் ஒன்றையோ, அல்லது வேறு ஏதேனும் காரியத்தையோ பெற்று நாம் பாவமன்னிப்பு தேடிக்கொள்ளலாம் என்று வந்தவருக்கு, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னது உறவுகளுக்கு நல்லது செய் நல்லவிதமாக அவர்களிடம் நடந்து கொள்வதே பாவத்திற்கு மன்னிப்பு என்று உணர்த்தி அனுப்பினார்கள். 

எப்படியாயினும் உறவுகள் பேணப்பட வேண்டும்.

சஹாபா பெருமக்கள் வாழ்விலிருந்து சில

அபூபக்ர் (ரலி) அவர்களின் உறவினரான மிஸ்தஹ் என்பவர் ஆயிஷா (ரலி) அவர்களின் மீது அவதூறு கூறிய போது அபூபக்ர் (ரலி) அவர்கள் கண்ணீர் வடித்து கடுமையான துன்பத்திற்கு ஆளானார்கள். உர்வா பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுவதாவது (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீதாணையாக ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு, ஒரு போதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிட மாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். அப்போது அல்லாஹ் உங்களில் செல்வம் மட்டும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம் எனும் (24 : 22 ஆவது) வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆம் அல்லாஹ்வின் மீதாணையாக அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கனவே தான் செலவிட்டு வந்ததைத் தொடரலானார்கள். மேலும் அல்லாஹ்வின் மீதாணையாக அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன் என்றும் கூறினார்கள். நூல் : புகாரி (6679) மனவலி, வருத்தம் சில கோபங்கள் இருந்த போதிலும் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைக்கும் சொந்தங்களை அந்நேரத்திலும் அரவனைத்தே வாழ்ந்தார்கள் பெருமக்கள்.

இணைவைப்பாளராக இருந்தாலும் உறவைப் பேண ஆசை கொண்டவர்கள்

 979 – وَقَالَ اللَّيْثُ : حَدَّثَنِي هِشَامٌ ، عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ قَالَتْ قَدِمَتْ أُمِّي وَهْيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ قُرَيْشٍ وَمُدَّتِهِمْ إِذْ عَاهَدُوا النَّبِيَّ صلى الله عليه وسلم مَعَ أَبِيهَا فَاسْتَفْتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقُلْتُ إِنَّ أُمِّي قَدِمَتْ وَهْيَ رَاغِبَةٌ { أَفَأَصِلُهَا } قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், “என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள். நூல் : புகாரீ 5979 *இரண்டு கூலிக்குரியவர்* 1466- حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا الأَعْمَشُ ، قَالَ : حَدَّثَنِي شَقِيقٌ ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : فَذَكَرْتُهُ لإِبْرَاهِيمَ فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ ، عَنْ أَبِي عُبَيْدَةَ ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللهِ بِمِثْلِهِ سَوَاءً قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللهِ وَأَيْتَامٍ فِي حَجْرِهَا قَالَ فَقَالَتْ لِعَبْدِ اللهِ سَلْ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ ، وَعَلَى أَيْتَامِي فِي حَجْرِي مِنَ الصَّدَقَةِ فَقَالَ سَلِي أَنْتِ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَوَجَدْتُ امْرَأَةً مِنَ الأَنْصَارِ عَلَى الْبَابِ حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي فَمَرَّ عَلَيْنَا بِلاَلٌ فَقُلْنَا سَلِ النَّبِيَّ صلى الله عليه وسلم أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي وَقُلْنَا لاَ تُخْبِرْ بِنَا فَدَخَلَ فَسَأَلَهُ فَقَالَ مَنْ هُمَا قَالَ زَيْنَبُ قَالَ أَيُّ الزَّيَانِبِ قَالَ امْرَأَةُ عَبْدِ اللهِ ، قَالَ : نَعَمْ لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி(ஸல்) அவாகள், “பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்” எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும் அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன். அப்துல்லாஹ் (ரலி-) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்’ எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், “அவ்விருவரும் யார்?எனக் கேட்டதற்கு அவர் “ஸைனப்’ எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் “எந்த ஸைனப்?” எனக் கேட்டதும் பிலால் (ரலி)அவர்கள் “அப்துல்லாஹ்வின் மனைவி’ எனக் கூறினார். உடனே நபி (ஸல்) “ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது” எனக் கூறினார்கள். நூல் : புகாரீ 1466 *உறவை முறித்து வாழ கூடாது.* உறவை முறித்து வாழ்பவனை அல்லாஹ்வும் முறித்தே வாழ்கிறான். الرَّحِمُ شِجْنَةٌ فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ ، وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே, “அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கிறாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்” (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்). அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி) நூல் : புகாரீ 5989 *உறவை முறித்தால் சுவனம் நுழைய தடை* لاَ يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான். அறிவிப்பவர் :ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல் : புகாரீ ஆக முஃமினான நல்லடியர்களே நாம் இவுலகத்தில் அல்லாஹ்வின் அன்பை பெறவும், மறு உலகில் சுவனம் எனும் பெரும் பாக்கியத்தை பெறுவதற்கு மிக சுலபமான வழிகளில் ஒன்று நம் உறவுகளிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்வதே. நபியவர்கள் சொன்னார்கள். يا أيُّها النَّاس، أفشُوا السَّلام، وأطعِموا الطَّعام، وصِلوا الأرحامَ، وصَلُّوا باللَّيل والنَّاسُ نيام، تدخلوا الجنَّةَ بسَلام. சாந்தியுடன் சுவனம் நுழைய சொந்தங்களோடு சேர்ந்து வாழ்வோமாக.. அல்லாஹ் நம் அனைவரையும் சொந்தங்கலோடு இணைந்து வாழ கிருபை செய்வானாக.. ஆமீன்..

Thursday, 24 December 2020

25-12-2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- பொறுமை என்ற பொற்குணம்


பொறுமை என்ற பொற்குணம்


يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ 
(அல்குர்ஆன் : 2:153)





أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ◆مَنْ يَصْبِرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَلَمْ يُعْطَوْا عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ◆


பொறுமை மனிதனின் பண்பு


உயர்ந்தோன் அல்லாஹ் தன்னை பொறுமையாளன் என்கிறான். பொறுமையாளர்களை நேசிப்பதாகவும் அவர்களுக்கு உதவுவதாகவும் கூறுகிறான்.

 قال الله تعالي :يَا أَيُّهَا الَّذِينَ آَمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ 2:153

திருக்குர்ஆனில் 70 க்கும் மேற்பட்ட இடங்களில் பொறுமையை பாராட்டி கூறுகிறான்.

பொறுமையைத் தவிர வேறெந்த பண்பையும் இவ்வளவு அதிகமாக பாராட்டியதாக நாம் காண முடியவில்லை.

இன்னும் விளக்கி கூறுவதென்றால், பொறுமை மனித இனத்துக்கே உரிய சிறப்புக் குணமாகும். மேன்மைமிக்க இக்குணத்தை விலங்குகளிடமோ அல்லது வானவர்களிடமோ எதர்பார்க்க இயலாது.

ஏனெனில், விலங்குகள் இச்சைகளின் அடிப்படையில் வாழக்கூடியவை. அவற்றின் அசைவையும், போராட்டத்தையும் இச்சைகளே தீர்மானிக்கின்றன. இச்சைகளை அடக்கும் ஆற்றலை அவற்றுக்கு அல்லாஹ் தரவில்லை.

வானவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நெருக்கத்தில் வாழ்பவர்கள். ஆசைகள் அவர்களிடத்தில் இல்லாததால் அதை கட்டுப்படுத்துதல் என்ற பேச்சே அவர்களின் விஷயத்தில் வராது.


وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ(46)
ஒரு டாக்ட்ர் அல்லது ஒரு வக்கீல் அல்லது ஒரு அரசியல் வாதி நம்முடன் இருந்தால் அதன் நன்மை என்ன?

அல்லாஹ் நம்முடன் இருந்தால் ? அதன் நன்மை எவ்வளவு?

அல்லாஹ்வை உடன் வைத்துக் கொள்ளும் சக்தி பொறுமைக்கு இருக்கிறது.

பொறுமை மூன்று விசயங்களை கொண்ட்து.

صبر علي الطاعات
வணங்கி வழி பட ஒரு (செயல் படும்)   பொறுமை தேவை
· صير عن المعاصي
 பாவம் செய்யாமல் இருக்க ஒரு (உறுதியான) பொறுமை தேவை
· صبر علي المصائب
 சேதனைகளை  தாங்கிக்க் கொள்ள் (நிதானம் என்ற) பொறுமை தேவை


(صبر على الطاعة) வணக்க வழிபாடுகளில் பொறுமை


எல்லா வணக்கங்களிலும் பொறுமை இருக்க வேண்டும்.

அவ்வாறு இல்லாமல் பொறுமை இழந்து செய்யப்படும் அவசரமான அமல்கள் வீணானதாகும் என மார்க்கம் சொல்லுகிறது.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்தார்கள். ஒரு மனிதர் பள்ளிக்கு வந்து தொழலானார். (தொழுது முடித்ததும்) நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். நபி (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் கூறினார்கள். பின்பு ‘திரும்பிச் சென்று நீர் தொழுவீராக! நீர் தொழவே இல்லை’ என்று கூறினார்கள். அந்த மனிதர் முன்பு தொழுதது போலேவே மீண்டும் தொழுது விட்டு வந்து நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். ‘திரும்பிச் சென்று தொழுவீராக நீர் தொழவே இல்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு மூன்று தடவை நடந்தது. அதன் பிறகு அந்த மனிதர்’சத்திய மார்க்கத்துடன் உங்களை அனுப்பியுள்ள இறைவன் மீது ஆணையாக! இவ்வாறு தொழுவதைத் தவிர வேறு எதையும் நான் அறிந்திருக்கவில்லை; எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார்.

‘நீர் தொழுகைக்காக நின்றதும் தக்பீர் கூறுவீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் நிதானமாக ருகூவு செய்வீராக! பின்னர் ருகூவிலிருந்து எழுந்து நேராக நிலைக்கு வருவீராக! பின்னர் நிதானமாக ஸஜ்தாச் செய்வீராக! ஸஜ்தாவிலிருந்து எழுந்து நிதானமாக உட்கார்வீராக! இவ்வாறே தொழுகை முழுவதும் செய்வீராக!’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).    📚 *நூல்கள்: புகாரீ 757, முஸ்லிம் 662


_நபியவர்களின் இரவு நேரத் தொழுகையை பற்றி அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஹஜ்ரத் அபு சலமா ரலி அவர்கள் வினவினார்கள்._

_அதற்கு பதிலளித்த அன்னை அவர்கள்._

_அதன் அழகையும், நீளத்தையும் நீ கேட்காதே.!_

என்று ஒரே வரியில் நபியின் தொழுகையின் வர்ணனையை முடித்து விட்டார்கள்.

அவ்வளவு பொறுமையான நிலையில் நபியின் தொழுகை அமைத்துள்ளது.

நோன்பிலும் பசித்திருந்து,தாகித்திருந்து, மனோ இச்சைகளை கட்டுபடுத்தி பாவத்தை விடுவதை கொண்டு *பொறுமையோடு* இருக்கும் நோன்பிற்க்கே அதிக கூலி.

இவ்வாறே நம் எல்லா வணக்க வழிபாடுகளும் பொறுமையோடு அமைந்தால் அதுவே அமலகளின் கபூலிய்யத்துக்கு காரணமாகிவிடுகிறது.

(صبر على المعاصي)                              பாவம் செய்யும் சந்தர்ப்ப சூழ்நிலை ஏற்ப்பட்டும் அதில் பொறுமையோடு செயல்பட்டு அந்த பாவத்தை விட்டு தூரச்செல்வது.*


ஒரு பாவத்தை செய்ய எல்லா சூல்நிலைகளும் கைகூடி வந்த பிறகு அந்த இடத்தில் அந்த பாவத்தின் தண்டனையை பற்றி சிந்தித்தவராக அல்லாஹ்வை பயந்து, இந்த பாவத்தை செய்தால் நமக்கு இந்த உலகிலும் மறு உலகிலும் என்ன கேவலம் கிடைக்கும் என்பதை உணர்ந்து *பொறுமையோடு* சிந்தனை செய்து விலகி கொள்வது முஃமினின் உயர்வான பண்பு.


அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இருக்கும் ஏழு நபர்களில் ஒருவர்,

நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகி ஒருவரை விபச்சாரத்திற்காக அழைத்தும் நான் அல்லாஹ்வை பயப்படுகின்றேன் என்று கூறி(ஒதுங்கிக் கொண்டவர்).


காளி இயாள் (ரஹ்) அவர்கள், இந்த ஹதீதிற்கு விளக்கம் அளிக்கும் போது, எந்த ஒரு ஆணும் அழகுள்ள நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்புவார்கள், அது இயற்கையும் கூட, அப்படிப்பட்ட பெண்களை அடைவதற்கு பல சிரமங்களை மேற்கொள்ள வேண்டிவரும். ஆனால் எந்த ஒரு சிரமமுமின்றி அப்படிப்பட்ட பெண்ணே அழைக்கும் போது, அவளிடமிருந்து ஒதுங்கிக் கொள்பவரும் அந்த ஏழு கூட்டத்தில் அடங்குவார். இதை ஒரு முழுமையான முஃமினைத்தவிர வேறு யாரும் செய்யமுடியாது. முழுமையான முஃமின் அல்லாதவர் இதை அரிய சந்தர்ப்பமாக? கருதி பொறுமையிழந்து அந்த பெண்ணுடன் இன்பம் அனுபவித்து விடுவார்.

எந்த பாவமாக இருந்தாலும்,சிறியதோ பெரியதோ அதை செய்யாமலிருக்கிற வழிகளை ஆயிரம் தடவைகள் பொறுமையோடு சிந்தித்து விலகுவதே சிறந்தது.

முஃமினிடத்தில் இருக்க வேண்டிய மிக முக்கியமான பண்பு பொறுமை.

الصبر نصف الإيمان
என்றார்கள் அருமை நபி அவர்கள்.

(صبر على المصائب)             சோதனைகள் ஏற்படும் நேரம் பொறுமையை கையாளல்


உண்மையில் ஒரு முஃமினின் வாழ்வு ஒரு சோதனைக் களமே! திருமறை நிழலில் அவனது வாழ்வில் இடறுகள் வரும் என அவன் எதிர்பார்த்திருந்தால் எந்தக் கஷ்டமும் அவனை எதுவும் செய்திடல் முடியாது.
ஆனால், அதிகமானவர்களின் பொறுமையற்ற பண்புதான் பல சந்தர்ப்பங்களில் அவர்களைப் படைத்துப் போஷிக்கும் இறைவனை மறக்கவும், மறுக்கவும் செய்துவிடுகிறது.

 பொறுமைப் பண்பை சிலாகித்துக் கூறுகின்றான்.
وَالَّذِينَ صَبَرُوا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِمْ  [الرعد : 22]
‘அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற் கொள்வார்கள்.’               (அல்குர்ஆன் : 13:22)
பொறுமைப் பண்பு மனித வாழ்வின் தடுமாற்ற நிலையிலிருந்து விடுவித்து சீரிய, நோரிய வாழ்வின் பக்கம் இட்டுச் செல்கின்ற ஓர் உயர்ந்த சாதனமாக அமைந்து காணப்படுகிறது.


மக்காவில் கஃஃபாவிற்கு அருகே படுத்திருந்த பெருமானாரிடம் தோழர்கள் கேட்டார்கள்: எதுவரை பொறுமை?
பெருமானார் சொன்னார்கள் : அவசரப் படுகிறீர்கள் , நீங்கள் இரும்புச் சீப்பால் தலை வாரப்படுவீர். மண்ணுக்குள் புதைக்கப் பட்டு தலை இரு கூறாக்கப் படும். பின்னர் அமைதி வௌம் சன்ஆ விலிருந்து ஹழரமவ்த் வரை ஆபரணம் அணிந்த பெண் தனியாக நடந்து செல்வாள் தனது ஆடுகளுக்கு ஓநாயை தவிர வேறு எதையும் அவள் பயப்பட்த் தேவையிருக்காது.

அது போலவே இடையூறுகளும் துன்பங்களயிம் நேரில் அனுபவித்த சந்தர்ப் பத்திலும் நிதானம் இழக்காமல் பொறுமை காத்தார்கள்.


நபி அய்யூப் அலை அவர்களின் பொறுமையை பற்றி நமக்கு தெரியமே..

அவர்களுக்கு ஏற்பட்ட நோயின் சோதனையின் போது அவர்கள் மேற்கண்ட பொறுமை.!

 _நபி இப்ராஹீம் (அலை), நபி_ _இஸ்மாயீல் (அலை_ ) _அவர்களின் பொறுமை:_ 
      ஹஜ்ரத் இப்ராஹீம் (அலை) அல்லாஹு தஆலா பலவழிகளில் சோதித்தான். நபியவர்கள் எல்லா சோதனைகளிலும் வெற்றியடைந்தார்கள். அதில் ஒன்று தான் பல வருடங்கள் கழித்து பெற்ற பாசமிகு மகனை அறுப்பதாக கனவு காண்கிறார்கள். இதே கனவு திரும்ப, திரும்ப வருகிறது. எவ்வித பதற்றம், திடுக்கமில்லாமல், புலம்பாமல்,   அல்லாஹ்வின் கட்டளை என்றெண்ணி அறுப்பதற்கு தயாராகிறார்கள். இதை தன் அருமை புதல்வன் இஸ்மாயீல் (அலை) அவர்களிடம் சொல்லும் பொழுது பதற்றமடையாமல், நீங்கள் உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள் என்றார்கள்.
  இதை பற்றி அல்லாஹு தஆலா குர்ஆனில் கூறுவான்.
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ ۚ قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ ۖ سَتَجِدُنِي إِن شَاءَ اللَّهُ مِنَ الصَّابِرِينَ 
 ". பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: “என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!” (மகன்) கூறினான்; “என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.”(37:102)
 
இப்ராஹீம் (அலை), இன்னும் இஸ்மாயீல் (அலை) அவர்கள் இந்த சோதனையில் பொறுமையாக இருந்ததால், அறுப்பதற்கு ஆட்டை அனுப்பி வைத்தான். அதை கியாமத் நாள் வரக்கூடிய மக்களுக்கு ஒரு வணக்கமாக ஆக்கினான்.
 

நமது நபி அவர்களின் வாழ்வில் ஏற்படாத சோதனாகளா....?

அனைத்திலும் பொறுமையை கையாண்டார்கள் பொறுமை நபி..

அதுபோலவே வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொறுமையை மேற்கொள்வது முஃமினின் உயர்ந்த குணம்.


பொறுமையின் பிரதி பலனாக சுவனம் வேண்டுமா ? கிடைக்கும்

الجنة لمن صبر على البلاء في الدنيا قال عطاء بن أبي رباح: قال لي ابن عباس: ألا أريك امرأة من أهل الجنة قلت: بلى. قال: (هذه المرأة السوداء أتت النبي صلى الله عليه وسلم فقالت: إني أصرع وإني أتكشف فادع الله لي قال إن شئت صبرت ولك الجنة وإن شئت دعوت الله أن يعافيك فقالت أصبر فقالت إني أتكشف فادع الله لي أن لا أتكشف فدعا لها). متفق عليه. وقال سفيان بن عيينة: (لم يعط العباد أفضل من الصبر به دخلوا الجنة)


அதா இப்னு அபீ ரபாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னிடம், 'சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?' என்று கேட்டார்கள். நான், 'ஆம்; (காட்டுங்கள்)' என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதாம் அவர். 
  
இவர் (ஒரு முறை) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'நான் வலிப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிலிருந்து ஆடை விலகி ) உடல் திறந்து கொள்கிறது. எனவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி(ஸல்) அவர்கள், 'நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறினார்கள். இந்தப் பெண்மணி, 'நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆனால், (வலிப்பு வரும்போது ஆடை விலகி ) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார். அவ்வாறே நபி(ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள். 
நூல்; புஹாரி எண் 5652 
  
அன்பானவர்களே! நமக்கு நோய் வருமென்றால், அதற்காக மருத்துவம் செய்வோம்; அதோடு அல்லாஹ்விடம் துஆ செய்வோம். அந்த நோய் சில நாட்களில் தீர்ந்துவிடும் என்றால் பிரச்சினையில்லை. ஆனால் நோய் தீர தாமதமாகும் நிலை ஏற்பட்டால், அல்லது நோய் தீராமலேயே போய்விட்டால் அங்கே அல்லாஹ்வின் நாட்டம் என பொறுமை கொள்வதை விடுத்து, அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கையிழந்து அல்லாஹ்வின் மீதே வெறுப்புறுவதை  பார்க்கிறோம். 

  
தான் நோயால் வாடினாலும் பரவாயில்லை தனக்கு அல்லாஹ் தந்த நோயை பொருந்திக்கொண்டு, அழகிய பொறுமையை மேற்கொண்டு சுவனத்தை  பெறவே விரும்புகிறேன் என்றார்களே! அதோடு, தனது நோயின் போது கூட, தான் அறியாத நிலையில் கூட  தனது ஆடை விலகிவிடக் கூடாது என விரும்பி, அதற்காக மட்டும் துஆ செய்யுமாறு அப்பெண்மணிநபியவர்களிடம் வேண்டுகிறார்களே! அதுதான் சஹாபி பெண்மணிகளின் இறையச்சத்திற்கும், பொறுமைக்கும் அடையாளம். 

சுவனத்தில் கிடைக்கும் புகழ் மாளிகை


பைத்துல் ஹம்து என்றால் என்ன 
தெரியுமா?

பைத்துல் ஹம்து உங்களுக்கு உண்டா???????

"ஒரு மனிதனுடைய குழந்தை இறந்துவிடும்
பொழுது அல்லாஹ் தனனுடைய
மலக்குமார்களிடம் " நீங்கள் என்னுடைய
அடியானுடைய குழந்தையின் உயிரை
எடுத்துவிட்டீர்களா? எனக் கேட்பான்.

அதற்கு அவர்கள். "ஆம் என கூறுவார்கள்.
அல்லாஹ். " நீங்கள் அவனுடைய
இதயக்கனியை எடுத்துவிட்டீர்களா?" எனக்
கேட்பான். அதற்கு அவர்கள் "ஆம்!" எனக்
கூறுவார்கள். அல்லாஹ் கேட்பான்:

அதற்கு என்னுடைய அடிமை என்ன
கூறினான்?" அவர்கள் கூறுவார்கள்:
"அவர் உன்னை புகழ்ந்தார். 

மேலும்,
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி
ராஜிஊன்." ( நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே
உரியவர்கள் அவனிடமே திரும்பக் கூடியவர்களாக
உள்ளோம்)" 

அதற்கு
அல்லாஹ், "என்னுடைய அடியானுக்குச்
சுவர்க்கத்தில் ஒரு வீடு கட்டுங்கள். அந்த
வீட்டைப் "புகழுக்குரிய வீடு" என்று
அழையுங்கள்." எனக் கூறுவதாக நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ: 1021 )

நம் சிறு வயது குழந்தைகள் இறந்த பின் பொறுமை  காப்பதும் மகத்தான கூலியை பெற்று தரும்.


கோபம் தலைக்கு ஏறும் செயல்களின் போது கூட நபி அவர்களின் அழகிய பொறுமை

நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நாகரீகம் என்றால் என்னவென்று அறியாதவர்கள். தர்மம் கேட்கும் போது கூடக் கடுமையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களின் இந்நிலைக் கண்டு நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்தார்களே தவிர கண்டிக்கவில்லை.அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன்.


அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுடைய தோன் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, முஹம்மதே! உங்கடமிருக்கும் இறைவனின் செல்வத்திருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.



​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

​நூல்: புகாரி 5809

இப்படி வாழ்வின் எல்லா நிலைகளிலும் பொறுமை கொள்ளும் முஃமின் உயர்ந்த அந்தஸ்திற்கு உரித்தாகிறார்.


 حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الْأَزْدِيُّ وَشَيْبَانُ بْنُ فَرُّوخَ جَمِيعًا عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ وَاللَّفْظُ لِشَيْبَانَ حَدَّثَنَا سُلَيْمَانُ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَجَبًا لِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ  رواه مسلم


ஒரு இறை நம்பிக்கையாளன் மகிழ்ச்சி அடைந்தால் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு கூடுதல் நன்மையாகவும் ஆகிவிடுகிறது. ஒரு துன்பம் அவனை நெருங்கும்போது *பொறுமை* யைக் கையாள்கிறான். அதுவும் அவனுக்கு நன்மையாகவே மாறிவிடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

ஆக வாழ்வில் எல்லா நிலைகளிலும் பொறுமையோடு செயல்ப்பட்டு, உயர்ந்த பொறுமைசாலிகளாக ஆகுவதற்கு  வல்ல இறைவன் நமக்கு தவுஃபீக் செய்வானாக..

ஆமீன்...

Thursday, 10 December 2020

11/12/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- வலிமையான ஈமானோடு


،الحمد لله الصلاه والسلام على رسول الله، اما بعد 

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

اِنَّمَا الْمُؤْمِنُوْنَ الَّذِيْنَ اٰمَنُوْا بِاللّٰهِ وَرَسُوْلِهٖ ثُمَّ لَمْ يَرْتَابُوْا وَجَاهَدُوْا بِاَمْوَالِهِمْ وَاَنْفُسِهِمْ فِىْ سَبِيْلِ اللّٰهِ‌  اُولٰٓٮِٕكَ هُمُ الصّٰدِقُوْنَ‏

நிச்சயமாக, (உண்மையான) முஃமின்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், ஈமான் கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம் செய்வார்கள் - இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள்.

(அல்குர்ஆன் : 49:15)

قَوْلُهُ ﷺ: يَخْرُجُ مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِه

 مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ.

மறுமை நாளில் அல்லாஹ் கூறுவான்

யாருடைய உள்ளத்தில் கடுகளவு இறைநம்பிக்கை (ஈமான்) உள்ளதோ அவரை (நரகத்திலிருந்து) வெளியேற்றுங்கள்" என்று கூறுவான்.


"முதலில் நம்முடைய ஈமானின் நிலையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்"

தொழுகையிலும் சரி, அல்லாஹ்வின் திருமறையை ஓதுவதிலும் சரி, சஹாபாக்கள்  உணர்ந்த சுவையையும் லயிப்பையும் நாம் எப்போதாவது  உணர்ந்த்திருக்கின்றோமா? நம்மில் மிக குறைவானவர்கள் சில நேரத்தில்  உணர்ந்திருக்கலாம். ஆனால், காணாதவர்கள் தான் அதிகம்

 நாம் தொழுகின்றோம், நோன்பு நோற்கின்றோம், தானம் செய்கின்றோம், ஹஜ்  செல்கின்றோம் , சஹாபாக்கள் செய்த எல்லா இபாதத்களிலும் ஈடுபடுகின்றோம்.  ஆனால், அவர்களது இபாதத்துகளில் காணப்பட்ட ஈரத்தை, பசுமையை நாம்  காண்பதில்லை.

 நாம் குடும்ப வாழ்கை மேற்கொள்கிறோம். கொடுக்கல் வாங்கல்களில்  ஈடுபடுகின்றோம். சமூக உறவுகளில் ஈடுபடுகின்றோம். ஆனால், இவற்றை  செயல்படுத்துகின்ற போது சஹாபாக்களில் காணப்பட்ட ஈமானின் அழகையும் நேர்மையையும்  நம்மிடம் காண முடியவில்லை.

ஹழ்ரத் இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் தனது மாணவர்களைப் பார்த்துள் கூறினார்கள்:  சஹாபாக்களை விடவும் நீங்கள் அதிகமாக தொழுகையில் ஈடுபடுகின்றீர்கள், நோன்பு  நோர்கின்றீர்கள், ஆனால் அவர்கள் உங்களை விட சிறந்து காணப்பட்டார்கள்.  காரணத்தை வினவியபோது, அவர்கள் உங்களை விடவும் உலகில் பற்றற்றவர்களாக  இருந்தார்கள். உங்களை விடவும் மறுமையில் ஆசை வைத்தவர்களாக, ஈமானில் உறுதியாக  இருந்தார்கள்  என்றார்கள்.

 செய்யிதுனா அபூபக்கர்(ரலி) அவர்களைப் பற்றி சில தாபியீன்கள் கூறுகின்றபொழுது, அபூ  பக்கர்(ரலி) அவர்கள் அதிகமாக தொழுகையாலும் நோன்பாலும் எங்களை  மிகைக்கவில்லை. மாறாக அவரது உள்ளத்தில் ஆழப் பதிந்த ஈமானால்தான் எங்களை  மிகைதிருந்தார்கள் என்றனர்.

எனவே புறச் செயல்களில் பெரிய வேறுபாடு காணப்படாவிட்டாலும் அகச் செயல்களில்  வேறுபாடு இருந்திருக்கிறது. அவர்கள் இபாதத்தையும் சரி குடும்ப வாழ்கையையும்  சரி சமூக வாழ்கையையும் வியாபாரத்திலும் சரி சுவைத்துச்  செய்துருக்கிரார்கள். அதில் ஈமானின் அழகும் நேர்மையும் பிரதிபலித்திருகிறது…

 அன்பானவர்களே இங்கே நம்முடைய நிலையை அலசி பார்க்க வேண்டும்…


"உறுதியான ஈமானால் பல நற்பேறுகள் பெற்ற ஒரே குடும்பம்"

இணை வைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு,சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யாரழியல்லாஹு அன்ஹா ஆவார்.

குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையாரழியல்லாஹு அன்ஹா அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்ரழியல்லாஹு அன்ஹு அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.

வீரத்தாயின் மகனான பெற்றோரின் தியாக மரணத்திற்குப் பின் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு ஏகத்துவக் கொள்கையை இதயத்தில் ஏந்தியவராக இணைவைப்பாளர்களின் எதிர்ப்பை மனத்துணிவுடன் சந்திக்கிறார். சுடு மணலில் ஆடையின்றி கிடத்தப்பட்ட அம்மார்ரழியல்லாஹு அன்ஹு ஈமானிய உறுதியுடன் திகழ்வதைக் கண்டு திடுக்குற்ற அபூஜஹ்ல் சித்ரவதைகளை அதிகரித்து இணைவைக்கும்படி கூறுகிறான். மறுக்கிறார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு.

தண்ணீரில் தலையை முக்கி மூர்ச்சையாக்கின்றனர் இணைவைப்பாளர்களால் உயிர் போகும் அந்நிலையில் அம்மார்ரழியல்லாஹு அன்ஹு அவர்களை நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையை இகழ்ந்துரைக்க ஏவுகின்றனர். அவ்வாறே செய்கின்றார் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள். விட்டு விடுகின்றனர்.

அழுதவாறு நபிகளாரிடம் வந்த அம்மார்ரழியல்லாஹு அன்ஹு நான் இணைவைப்பு வார்த்தைகளை கூறிவிட்டேன் எனக் கூற அப்போது எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) – அவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர – (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் கு.ப்ரைக்கொண்டு விரிவாகி இருக்கிறதோ – இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு. (16:106) என்ற வசனம் இறங்கியது.


"இப்ராஹிம் நபிக்கு கொடுத்த அதே சோபனம்"

அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ஈமானை ஏற்றத்தற்காக தீயிலிட்டு பொசுக்குவார்கள். அப்பொழுது நபி இப்ராஹிம்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கு நெருப்பை குளிரச் செய்தது போல் இவருக்கும் குளிரச் செய் என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்துஆ செய்தார்கள் என்று அம்ரு இப்னு மைமூன்ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்.

அம்மார் (ரலி) அவர்களை பகைத்தவர் அல்லாஹவை பகைத்தவர்

அம்மாரின் ஈமானிய உறுதி இறைநம்பிக்கை அவரின் எலும்புகளுக்குள்ளும் ஊடுறுவியுள்ளது.

( قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : (مُلِئَ عَمَّارٌ إِيمَانًا إِلَى مُشَاشِهِ) .

وصححه الألباني في " صحيح ابن ماجة)

 யார் அம்மாருடன் பகை கொள்கிறாரோ அவர் அல்லாஹ்வுடன் பகை கொள்கிறார் என்ற நபி மொழியைச் செவியுற்ற காலித் பின் வலீத் ரழியல்லாஹு அன்ஹு அம்மார்ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுடன் இருந்த மனப் பிணக்கை நீக்கி சமாதானம் செய்து கொண்டார்கள்..


"சுவனத்தில் தங்கும் குடும்பம்"

) عَنْ جَابِرٍ: " أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِعَمَّارٍ وَأَهْلِهِ وَهُمْ يُعَذَّبُونَ ، فَقَالَ : ( أَبْشِرُوا آلَ عَمَّارٍ، وَآلَ يَاسِرٍ، فَإِنَّ مَوْعِدَكُمُ الْجَنَّةُ) 

நபியவர்கள்  ஒரு தடவை ஹழ்ரத் யாசிர் (ரலி) அவர்களின் குடும்பத்தாரை கடந்து செல்ல நேரிட்ட போது அவர்கள் குஃப்பர்களால் ஈமானுக்காக ஈமானை ஏற்றதர்க்காக வேதனை செய்யபடுவதை கண்ணுற்ற போது இவ்வாறு சொன்னார்கள்.

"யாசிரின் குடும்பத்தாரே, அம்மாரின் குடும்பத்தாரே நிச்சயமாக நீங்கள் சுவனத்தில் வசிப்பீர்கள் என்று சுபசோபனம்  சொன்னார்கள்."


"நபியின் நாவால் ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாப்பு பெற்றவர்"

وى البخاري (3287) عَنْ عَلْقَمَةَ ، قَالَ : " قَدِمْتُ الشَّأْمَ ، فَقُلْتُ: مَنْ هَا هُنَا ؟ ، قَالُوا أَبُو الدَّرْدَاءِ ، قَالَ : أَفِيكُمُ الَّذِي أَجَارَهُ اللَّهُ مِنَ الشَّيْطَانِ عَلَى لِسَانِ نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ - يَعْنِي عَمَّارًا " .

அல்கமா இப்னு கைஸ் அந் நகஈ(ரஹ்) அறிவித்தார்கள்;

நான் ஷாம் நாட்டிற்குச் சென்றேன். பள்ளிவாசலில் நுழைந்(து இரண்டு ரக்அத்கள் தொழு)ததும் ‘இறைவா! எனக்கு ஒரு நல்ல நண்பரை ஏற்படுத்துவாயாக” என்று பிராத்தித்தேன். பிறகு அபுதர்தா(ரலி) அவர்களிடம் (சென்று) அமர்ந்தேன். அபுத்தர்தா(ரலி) ‘நீங்கள் எந்த ஊர்க்காரர் ?’ என்று கேட்டார்கள். அதற்கு நான் ‘கூஃபா வாசி’ என்றேன். அபுத்தர்தா(ரலி) ‘(நபி – ஸல் – அவர்கள் அறிவித்த) வேறெவருக்கும் தெரியாத (நயவஞ்சகர்கள் தொடர்பான) இரகசியங்களை அறிந்தவர் உங்களிடையே இல்லையா?’ என்று ஹுதைஃபா(ரலி) அவர்களைத் கருத்தில் கொண்டு கேட்டார்கள். நான், ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘தன் நபியின் வாயால் எவரை ஷைத்தானிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றினானோ அவர் உங்களிடையே இல்லையா?’ என்று கேட்டார்… அம்மார்(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள். நான் ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன். அவர்கள், ‘நபி(ஸல்) அவர்களின் (பல்துலக்கும்) மிஸ்வாக் குச்சியையும், தலையணையையும் சுமந்து சென்றவர்… அல்லது அவர்களின் அந்தரங்க உதவியாளர்.. (இப்னு மஸ்வூத்) உங்களிடம் இல்லையா?’ என்று கேட்டார்கள். அதற்கு நான், ‘ஆம் (இருக்கிறார்)” என்று பதிலளித்தேன்.

[ஹதீஸ் சுருக்கம் புஹாரி எண் 3743 ]

இத்தகைய சிறப்பு வாய்ந்த அம்மார்[ரலி] அவர்கள், இஸ்லாத்திற்காக முதன்முதலாக உயிர்த்தியாகம் செய்த சுமைய்யா[ரலி], யாசிர்[ரலி] ஆகியோரின் அருமை மகன் என்பது நாமறிந்த செய்திதான்.

புனிதமிக்க மஸ்ஜிதுன் நபவியின் கட்டுமனான பணியில் அதிகம் உடலுழைப்பு செய்த அந்த வேளையில் அல்லாஹ்வின் தூதர்[ஸல்] அவர்கள் கூறினார்கள்.

فروى البخاري (2812) عن أبي سعيد قال : " كُنَّا نَنْقُلُ لَبِنَ المَسْجِدِ لَبِنَةً لَبِنَةً ، وَكَانَ عَمَّارٌ يَنْقُلُ لَبِنَتَيْنِ لَبِنَتَيْنِ ، فَمَرَّ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، وَمَسَحَ عَنْ رَأْسِهِ الغُبَارَ ، وَقَالَ : ( وَيْحَ عَمَّارٍ تَقْتُلُهُ الفِئَةُ البَاغِيَةُ ، عَمَّارٌ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ، وَيَدْعُونَهُ إِلَى النَّارِ) .

 அபூ ஸயீத்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

 ‘நாங்கள் ஒவ்வொரு செங்கல்லாகச் சுமப்பவர்களாக இருந்தோம். (ஆனால்) அம்மார்(ரலி) இரண்டிரண்டு செங்கற்களாகச் சுமக்கலானார். அதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அவரின் மேனியில் படிந்த மண்ணைத் தட்டிவிட்டு ‘பாவம் அம்மார்! இவரை அக்கிரமக்காரக் கூட்டம் கொலை செய்யும்! இவர் அவர்களைச் சுவர்க்கத்திற்கு அழைப்பார். அவர்களோ இவரை நரகத்திற்கு அழைப்பார்கள்.” என்று கூறினார்கள். அதற்கு அம்மார்(ரலி) ‘அந்தக் குழப்பங்களைவிட்டும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்’ என்று கூறினார்கள்

ஆதாரம்;புஹாரி எண் 447

தான் கொல்லப்படுவோம் என்பதை இறைத்தூதர்[ஸல்] அவர்களின் வாயால் செவிமடுத்த அம்மார்[ரலி] அவர்கள், நம்மை போன்ற பலவீனமானமானவராக இருந்தால், உயிர்மீது ஆசையுடையவராக இருந்தால் அவர் இஸ்லாத்தை விட்டே விரண்டோடியிருப்பார். அம்மார்[ரலி] அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. தான் கொல்லப்படப்போகும் நாளை எண்ணி கண்ணீர் விட்டு கொண்டிருக்கவில்லை. மாறாக, அத்தகைய குழப்பத்திலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூறுகிறார்கள் என்றால், அவர்கள் உள்ளத்தில் எந்த அளவு ஈமானின் வலிமை நிரம்பியுள்ளது என்பதை விளங்கிக்கொள்ளலாம். அந்த உறுதியான ஈமான் அவர்களுக்கு ஷஹீத் எனும் அந்தஸ்த்தையும், சுவனத்தில் உயர்ந்த படித்தரத்தையும் பெற்றுத்தந்துள்ளது.

ஈமானுக்காக இவர்களின் குடும்பம் செய்த தியாகம் இஸ்லாமிய வரலாற்றில் முதல் மைல் கல் என்று சொன்னால் மிகையாகாது.

ஈமானிய பலஹீனம்,ஈமானிய சோர்வு, எதுவுமே இல்லாமல் ஈமானுக்காக எந்த அளவிற்கும் வேதனையை சகித்துக்கொண்டு, ஈமானின் ருசியை அடைந்த உத்தமர்கள்.

நம் ஈமானின் நிலை இன்று துன்யாவின் அற்ப சுகத்திற்காக முழுமையாக அடகு வைக்க பட்டு ஷைதானின் கோர பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறது.


"ஈமானுக்காக இவ்வுலக சுகம் அனைத்தையும் இழந்த மிக பெரிய பணக்காரர்"

مصعب بن عمير ممن اشترى الآخرة بالدنيا، وترك النعيم الذي كان يتمتع به في الدنيا ليحظى بنعيم الآخرة. فقد كان أحسن شباب مكة لباساً وأطيبهم رائحة وأنعمهم جسماً

புத்தம் புது ஆடைகள், வனப்பான வாழ்வு, எழில் மிகு கேசம், அடுத்த தெரு வரை நீளும் அத்தர் வாசம் என கொகுசு வாழ்க்கையின் கொழுந்தாக விளங்கியவர்கள் முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

மக்காவில் மிக அழகிய இளைஞர்களில் ஒருவர் அவர். நல்ல வசீகரத் தோற்றம். செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்த கொழுந்து. வறுமையென்றால், "கிலோ என்ன விலை?” என்ற அளவிற்கு சொகுசும் ஆடம்பரமும் வசதியுமாய் அமைந்த வாழ்க்கை. குணாஸ் பின்த் மாலிக் என்பவர் அவரின் தாயார். கரடுமுரடான சுபாவம்; மக்களைப் பயமுறுத்தும் அளவிற்கு 'அகன்ற வாய்'. ஆனால் மகன் மீது அளவற்ற பாசம். "அனுபவிடா மகனே! என் செல்லம்!” என்று தங்குதடையில்லாமல் சுகபோகத்தில் மகனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். விலையுயர்ந்த ஆடைகள், சிறந்த கால்நடைகள், வேளா வேளைக்கு அருமையான உணவு, மிகச் சிறந்த நறுமணப் பொருட்கள் என்று எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி செல்வ சுகத்தில் திளைத்துக் கொண்டிருந்தார் மகன். முஸ்அப் கடந்து சென்ற தெருவில் நுழைபவர், "ஹும்! முஸ்அப் இப்னு உமைர் இந்தத் தெருவில் உலாத்திவிட்டுப் போயிருக்கிறார் போலிருக்கிறதே” என்று எளிதாய் மோப்பமிட்டுச் சொல்லிவிடுமளவிற்கு அவர் பூசிக்கொள்ளும் நறுமணம் மிதந்து கொண்டிருக்கும்.

சுருக்கமாய் இக்கால உவமை சொல்வதென்றால், பணக்கார வீட்டின் உல்லாசப் பிள்ளைகள் என்று நெற்றியில் எழுதி ஒட்டிக்கொள்ளாத குறையாய் 'லேட்டஸ்ட் ஸ்டைலின்' அத்தனை அம்சங்களையும் சுமந்து கொண்டு மக்காவில் வலம் வந்து கொண்டிருந்தார் முஸ்அப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.

ஆனால் இஸ்லாத்தை ஏற்ற பின்னர் அவர்கள் ஈமானுக்காக சகித்த கொடுமைகள், விட்டுக்கொடுத்த உலக செல்வங்கள் ,உதரிதள்ளிய உலக வாழ்க்கை.

உலக வாழ்க்கையே கதி என கிடக்கும் நமது ஈமானுக்கு ஒரு மிகப்பெரிய பாடம்.


"முஸஅப் ரலி அவர்களின் ஈமானின் அடையாளத்தை கண்டு நபியவர்கள் சிந்திய  கண்ணீர்"

عن علي بن أبي طالب رضي الله عنه قال "إنا لجلوس مع رسول الله صلى الله عليه وسلم في المسجد، إذ طلع علينا مصعب بن عمير وما عليه إلا بردة مرقومة بفرو، فلما رآه رسول الله صلى الله عليه وسلم بكى للذي كان فيه من النعمة والذي هو فيه اليوم

ஒருநாள் தோழர்கள் சூழ அமர்ந்திருந்தார்கள் நபியவர்கள். அங்கு வந்தார்கள் முஸ்அப் (ரலி) அவரைக் கண்டதுமே தோழர்களின் தலை கவிழ்ந்தது.

பலர் கண்களில் கண்ணீர் வேறொன்றுமிலலை, கோலம்! முஸ்அபின் அலங்கோலம்!

நவநாகரீக ஆடைகள் பூண்டு, திரியும் தெருவெல்லாம் நறுமணம் பரப்பிச் சென்ற முஸ்அப், வறுமையின் இலக்கணமாய்க் கிழிந்து தொங்கிய மோசமான ஆடையுடன் நின்றிருந்தார். அவரை அன்புடன் ஆதுரவாய் நோக்கிய நபியவர்களின் கண்களிலும் கண்ணீர், "மக்காவில் முஸ்அபைப் போன்று பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பெற்ற இளைஞனை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். இப்பொழுது அவர் அனைத்தையும் அல்லாஹ்விற்காகவும் அவனது நபிக்காகவும் உதறித்தள்ளி விட்டு நிற்கிறார்" என்று சொன்னார்கள்.

மக்காவின் செல்வந்தருக்கு கப்ரில் கஃபன் துணி போதவில்லை

مصعب بن عمير قتل يوم أحد فلم نجد شيئاً نكفنه فيه إلا نمرة، كنا إذا غطينا بها رأسه خرجت رجلاه، فإذا غطينا رجليه خرج رأسه، فأمرنا رسول الله - صلى الله عليه وسلم - أن نعطي رأسه بها، ونجعل على رجليه إذخرا، ومنا من أينعت له ثمرته فهو يهذبها- يجنيها- انتهى.

உஹது போர் முடிந்து, அனைத்துக் களேபரங்களும் முடிந்தபின் வீழ்ந்து கிடந்த தம் தோழர்களின் உடல்களை பார்வையிட்டுக் கொண்டே வந்தார்கள் நபியவர்கள். அக்களத்தில் குரைஷிப் பெண்கள் நிகழ்த்திய கோரத் தாண்டவமும் நாம் ஏற்கெனவே படித்ததுதான். தாங்கவியலாத சோகக் காட்சி அது. இறந்த தோழர்களைக் கண்டு முஹம்மது நபி பகர்ந்தார்கள், "மறுமையில் நீங்களெல்லாம் வீரத் தியாகிகள் என்பதற்கு அல்லாஹ்வின் தூதர் சாட்சி பகர்கிறார்"

இறந்தவர்களை அக்களத்திலேயே நல்லடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன. முஸ்அபின் உடலை முழுவதுமாய்ப் போர்த்தக் கூடிய அளவிற்குக்கூட அவரது உடலில் துணி இல்லை. அதுவும் கிழிந்துபோன கம்பளித் துணி. தலையை மூடினால் கால் மூடவில்லை. காலை மூடினால் தலை மூடவில்லை.

செல்வச் செழிப்பிலும் சுக போகத்திலும் மிதந்து கொண்டிருந்த ஓர் இளைஞர், தாய், தகப்பன், சொத்து, சுகம் என அனைத்தையும் உதறி எறிந்துவிட்டு ஏக இறைவனைத் துதித்து வாழப் புகலிடம் ஒன்று கிடைத்தால் போதும் என்று கடல் கடந்து ஓடிய முஹாஜிர், யத்ரிப் மணலில் இஸ்லாமிய விதையைத் தூவி வீடுதோறும் இஸ்லாமிய விருட்சம் வளர்ந்தோங்க வைத்து மதீனத்து வரலாற்றிற்கு வித்திட்டவர், இறைவனும் அவனது தூதரும் மட்டுமே போதுமென்று நெய்யுண்டு, பட்டுடுத்தி, ஜவ்வாது பூசித் திளைத்த அங்கங்களையெல்லாம் துண்டு துண்டாய் இழந்து விட்டு, துண்டு துணியுடன் மடிந்து கிடந்தார் முஸ்அப் இப்னு உமைர் - ரலியல்லாஹு அன்ஹு.

இறுதியில் நபியவர்கள் கூறினார்கள், "அவரது தலையைத் துணியால் மூடிவிட்டு கால்களை இலைகள் கொண்டு மூடிவிடுங்கள்"

முஸ்அப் இப்னு உமைரின் வீர மரணத்தை நினைத்து மறுமையில் தமக்கு எந்தப் பங்கும் கிடைக்காமல் போய்விடுமோ என்று பயத்தில் நடுங்கி அழுவார் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி). ஒருமுறை அவர் நோன்பு திறக்க அவருடைய பணியாள் உணவு எடுத்து வந்தார். அதைக் கண்டு திடீரென்று பொங்கி அழுதார் இப்னு அவ்ஃப். "முஸ்அப் இப்னு உமைர் இஸ்லாத்தை ஏற்றபின் இவ்வுலகில் எவ்வித சொகுசையோ, நல்ல உணவையோ சுவைக்காமல் அனைத்தையும் மறுமைக்கு சேமித்து எடுத்துச் சென்றுவிட்டார். நமக்கு எல்லாம் இவ்வுலகிலேயே கிடைக்கிறதே மறுமையில் நம் பங்கு கிடைக்காமற் போய்விடுமோ" என்ற அச்சத்தில் விளைந்த அழுகை அது. கிளர்ந்தெழுந்த துக்கத்தில் அன்று அவர் அந்த உணவைக்கூட உண்ணவில்லை.

இப்படி பயந்து அழுதது யார்? சொர்க்கவாசி என்று திருநபி (ஸல்) அவர்களால் நன்மாராயம் வழங்கப்பெற்ற பத்துபேருள் ஒருவர். நம் கண்களெல்லாம் எந்த நம்பி்க்கையில் ஈரம் உலர்ந்து கிடக்கின்றன?

ஈமானின் சுவையை ருசித்த அவர்களுக்கு மறு உலக ருசியை அல்லாஹ் உலகத்திலே சுவைக்க செய்துவிட்டான்.


_ஈமானால் என்ன சாதிக்க இயலும்_

"மரண நேரத்தில் அல்லாஹ் கொடுத்த உணவு"

والله ما رأيت أسيرا قط خيرا من خبيب والله لقد وجدته يوما يأكل من قطف عنب في يده وإنه لموثق في الحديد وما بمكة من ثمر وكانت تقول إنه لرزق من الله رزقه خبيبا

(البخاري: 3045)

 குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை கொன்று விடவேண்டுமென முடிவெடுத்து நேரமது. திராட்சை கொத்திலிருந்து குபைப் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பழங்களை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அந்நாளில் மக்காவில் எந்தப் பழமுமில்லை. ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய உணவு தான் அது. நேரில் பார்த்த ஹாரிஃதாவின் மகள் இதைக் கூறினார்கள்.


"கடும் இருட்டில் ஈமானால் ஏற்பட்ட ஒளி"

عن أنس بن مالك أن رجلين من أصحاب النبي صلى الله عليه وسلم خرجا من عند النبي صلى الله عليه وسلم في ليلة مظلمة ومعهما مثل المصباحين يضيئان بين أيديهما فلما افترقا صار مع كل واحد منهما واحد حتى أتى أهله

இறைத்தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து உசைது இப்னு ஹுழைர், மற்றவரின் பெயர் அப்பாது இப்னு பிஷ்ர் (ரலியல்லாஹு அன்ஹு  இரு தோழர்களும் விடைபெற்று சென்றனர். அப்போது கும்மிருட்டுள்ள இரவு நேரமாகயிருந்தது. அவர்கள் செல்லும்போது அவர்களுக்கு முன்பாக இரு விளக்குகள் போல ஒளி கொடுத்துக் கொண்டிருந்தது. அவ்விருவரும் தத்தமது

வீட்டிற்கு செல்வதற்காக பிரிந்து நேரத்தில் ஆளுக்கொரு விளக்கு அவர்கள் வீடு செல்கின்றவரை

வெளிச்சம் கொடுத்தது.

 அறிவிப்பாளர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)

நூல்: புகாரீ ஹதீஸ் எண் 3639


"பல மைலுக்கு அப்பால் ஒலித்த ஈமானின் குரல்"

🌹 எல்லைதாண்டிய பார்வை🌹

 عن ابن عمر أن عمر بعث جيشا وأمر عليهم رجلا يدعى سارية فبينما عمر رضي الله عنه يخطب يصيح ياساري الجبل فقدم رسول من الجيش فقال يا أمير المؤمنين لقينا عدونا فهزمونا فإذا صائح يصيح ياساري الجبل فاسندنا ظهورنا إلى الجبل فهزمهم الله

 திண்ணமாக உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். சாரியா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களை அப்படைக்கு தளபதியாக நியமித்தார்கள். (மதீனாவில்) சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்த உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் யா சாரியா அல் ஜபல் (சாரியாவே! மலையை கவனித்து சண்டையிடுங்கள்!) என சப்தமிட்டார்கள்.

பிறகு படையிலிருந்து ஒரு தூதர் வந்து சொன்னார். அமீருல் முஃமினீன் அவர்களே! எங்கள் எதிரிகளோடு நாங்கள் போர் புரிந்தபோது அவர்கள் எங்களை விரட்டியடித்தார்கள். அப்போது *யா சாரியா அல்ஜபல்* என்று ஒரு சத்தம் கேட்டது. பின்னர் மலையை எங்களுக்கு பின்புறமாக ஆக்கிக் கொண்டு போர் செய்தோம். அல்லாஹ் அவர்களை விரட்டி விட்டான்.

மதீனாவின் மிம்பரில் கொடுத்த குரல் ,பாரசீக மண்ணில் கர்ஜித்தது என்றால் ஈமானின் வலிமை அவ்வாறு.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள்

நூல் : பைஹகீ (தலாயிலுந் நுபுவ்வா) ஹதீஸ் எண் 2655.

யுத்தம் நடைபெற்ற இடம் பாரசீகம். உமர் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் சொற்பொழிவு ஆற்றியது மதீனா மாநகரம்.

நாம் இன்று உலக ருசியில் மூழ்கி கிடப்பதினால் ஈமானின் சுவை தெரியாமல் இருக்கிறது.

ஸஹாபாக்களை போல நாம் ஈமானுக்காக நம் குடும்பம், பொருளாதாரம், சமூகம் என அத்தனையும் இழந்து ஈமானை காக்க வேண்டும் என்ற சூழல் இப்போது இல்லை.

நாம் நம் ஈமானை உறுதியான ஈமானாக,ஆக்குவதற்கு அல்லாஹ்வின் கடமைகளையும்,நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையையும் நம்மில் படி,படியாக கொண்டு வந்து அதை நம் கப்ர் வரை எடுத்து சென்றாலே நம் ஈமான் பலமிக்க ஈமான் ..

அல்லாஹ் நம் அனைவரையும் பலமிக்க ஈமான்தாரிகளாக வாழசெய்வானாக..

நம் கடைசி பேச்சும்,மூச்சும் ஈமானோடு பிரிவதற்கு அல்லாஹ் தவ்பீக் செய்வானாக.


ஆமீன்..

Thursday, 26 November 2020

27/11/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- வலிமார்கள் வாழ்வெங்கும் அற்புதமே


الحمد لله، الحمد لله رب العالمين، والصلاه والسلام على رسوله المرسلين، وعلى اله واصحابه اجمعين، اما بعد، فقال الله تعالى في القران العظيم، والقران المجيد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم

أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ

 يَحْزَنُونَ () الَّذِينَ آَمَنُوا وَكَانُوا يَتَّقُونَ () لَهُمُ الْبُشْرَى فِي الْحَيَاةِ الدُّنْيَا وَفِي الْآَخِرَةِ لَا تَبْدِيلَ لِكَلِمَاتِ اللَّهِ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ()

روى أبو نُعيم في كتابه "حلية الأولياء" (7 /285) عن سفيان بن عيينة أنه قال:

"عند ذكر الصالحين تنزلُ الرحمة".


"நல்லோர்களை நினைவு கூறும் இடத்தில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது"

வலிமார்கள் என்பவர்கள் அல்லாஹ்வாலக்கள் அல்லாஹ் அவர்களை குறித்து தன் திருமறையில் أولياء என்று கூறுகிறான்.

ஒவ்வொரு சாராருக்கும் வெவ்வேறு அந்தஸ்துகளும், தகுதிகளும் இருப்பதை அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிட்டு காட்டுகிறான்.

நபிமார்கள், ஷுஹதாக்கள், முத்தகீன்கள், சித்தீக்கீன்கள்,சாலிஹீன்கள் என பட்டியல் நீளும்.

அந்த வரிசையில் இவர்களை أولياء என அல்லாஹ் கூறுகிறான்.

வலிமார்கள் என்பவர்கள் நம்மை போல் உள்ளத்தில் எல்லாவற்றையும் வைத்து அல்லாஹ்வை வைப்பவர்கள் அல்ல..

அல்லாஹ்வை மட்டும் உள்ளத்தில் நிரப்பி மற்ற வஸ்துக்களை உள்ளத்தில் இல்லாமலே ஆக்கி கொள்பவர்களே வலிமார்கள் என்ற இறைநேசர்கள்.

அல்லாஹ்வில் ஆரம்பித்து அல்லாஹ்விலே முடிப்பார்கள் தங்கள் வாழ்கையை.

தீனின் மிக முக்கியமான அம்சமான ஆன்மீகத்தின் அடிப்படையில் செய்லபடுபவர்களே வலிமார்கள்..

ஆம் தீனின் மூன்றாவது அம்சமே ஆன்மீகம்.

ஈமான், இஸ்லாம் என்று கற்றுக்கொடுத்த ஜிப்ரயீல் இஹ்ஸான் என்ற ஆன்மீக தன்மையை ஏன் சொல்லி கொடுக்க வேண்டும்..

அதுவும் தீனின் அடிப்படைகளில் ஒன்றுதான் என்பதை உணர்த்தி சென்றார்கள்..

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்:

நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். 

பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார்.

 அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார்.

 பிறகு முஹம்மதே! இஸ்லாம் என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். 

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 

இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார்.

அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம்.

அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார்.

அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். 

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,

(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸின் கடைசியில் நபி அவர்கள் கூறிய வார்த்தை 

"அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள்."

நன்றாக நாம் உணர வேண்டும்.

ஈமான் இஸ்லாம் மட்டும் அல்ல இஹ்ஸான் என்ற ஆன்மீகமும் தீன்தான் என்றாகள் நபி அவர்கள்.

ஈமான், இஸ்லாமோடு மனதை தூய்மை படுத்தி கொள்ளும் இந்த தஸவ்வுப் இஹ்ஸான் என்ற ஆன்மீக நிலையை தனக்குள் ஆக்கி கொண்டவர்களே வலிமார்கள்..

அதனால் அவர்கள் இந்த உலகில் அல்லாஹ்வின் உதவியால் எதையும் நிறைவேற்றும் ஆற்றல் பெற்றவர்களாக விளங்கினார்கள்...  

லட்ச கணக்கில் மக்கள் இஸ்லாத்தை தழுவினார்கள்,

ஆயிரகணக்கில் தீயோர் நல்லோர்களானர்.

தீனை விட்டு விலகி உலக மாயையில் இருந்தோர் இவர்களின் பார்வையிலும், பேச்சிலும் நடைத்தையிலும் முழு தீன் தாரிகளானார்கள்..

ஆம் ,எப்படி தீய பார்வைக்கு மரணம் வரை தீங்கு இருக்குமோ நபியவர்கள் சொலிகாட்டினார்களே "கண் திருஷ்டி உங்களை மரணம் வரை கொண்டு சேர்க்கும்" என்பதாக ,

அதே போல் அல்லாஹ் அல்லாஹ் என்று தங்கள் வாழ்க்கை முழுதும் ஆக்கி கொண்டவர்களின் பார்வைக்கும் ,பேச்சிற்கும் தீனை உயிர்பிக்கும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்திருந்தான்..


"வலிமார்கள் யார்"

ஒரு முறை ஸஹாபாக்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே அவ்லியாக்கள் என்பவர்கள் யார்? என்று கேட்டார்கள் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 

"யாரை நீங்கள் பார்க்கும் போது இறைவனின் ஞாபகம் வருகின்றதோ அவர்கள் தான் அல்லாஹ்வின் இறைநேசர்கள் ஆவார்கள்" என பதிலளித்தார்கள். 

(நூல் பஜ்ஜார்)

"வாழ்க்கையே அற்புதமாக திகழ்ந்தவர்கள் வலிமார்கள்"


"வலிமார்களை அடித்தால் அல்லாஹ் அடிப்பான்"

மஹான் துன்னூனுல்

மிஸ்ரி-ரஹ் அவர்கள்

ஒரு ஊருக்குள்

செல்கிறார்கள்..

மழை பொழிந்து

ஆங்காங்கே

தண்ணீர் தேங்கி

கிடக்கிறது....

தெரியாமல்

பள்ளத்தில்

கால் வைக்க...

எதிரில் வந்த

புது மணப்பெண் மேல்

தண்ணீர் தெறிக்கிறது...

அவள் கணவன்

மஹானை

செருப்பால்

அடித்து விடுகிறான்...

பக்கத்து தெருவிற்கு

செல்கிறார்கள்

மக்கள்

மாலையோடு

வர வேற்கிறார்கள்..

யா அல்லாஹ்!

"அங்கே செருப்படி...

இங்கே

மலர் மாலை...

உன் திருவிளையாடல் புரியவில்லையே...!" என்கிறார்கள்

தூரத்தில்

மணப்பெண்

அழுதுக் கொண்டு

ஓடி வருகிறாள்...

"எஜமானே மன்னித்து விடுங்கள்....

என் கணவர்

இறந்து போய் விட்டார்!"

என்கிறாள்

மஹான் அமைதியாக

சொன்னார்கள்..

"உன் மீதுள்ள காதலினால்

உன் கணவன்

என்னை

அடித்தான்...."

"என் மீதுள்ள

காதலினால்

என் ரப்பு

அவனை

அடித்து விட்டான்...!"

என்றார்கள்.

أخرج الإمام البخاري في صحيحه:

((قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ قَالَ مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالْحَرْبِ )


"தாயின் துஆவும் ,வலி ஆன மஹானும்"

அது ஒரு

இரவு நேரம்...

பிள்ளையை

பக்கத்தில்

அமர வைத்து...

ஒரு பெண்மணி

குர்ஆன் ஓதிக் கொண்டு இருக்கிறார்...!

"திடீரென அவருக்கு

விக்கல் வருகிறது...!"

"மகனே!

தண்ணீர் என்கிறார்...!"

"வீட்டில்

தண்ணீர் இல்லை...!"

"அக்கம் பக்கம்

எல்லோரும்

உறங்கிவிட்டனர்..!"

நீண்ட தூரம் சென்று

தண்ணீர் பிடித்து வந்து

பார்த்த போது...

அந்தத்தாய் தூங்கிவிட்டார்....!"

தஹஜ்ஜத் தொழ

எழுந்தபோது...

"கையில் தண்ணீரோடு

நிற்கும் மகனை

கண்ணீரோடு

பார்க்கிறார்..!"

உடனே

"யா அல்லாஹ்!

நான் நேசிப்பது போல்...

நீயும் என் மகனை நேசிப்பாயாக..!"

என துஆச் செய்கிறார்.

பின்னர்

இறைஞானக் கல்வி கற்க மகனை அனுப்பி வைக்கிறார்...!

பல நாடுகளில்

பல ஞானிகளிடம்

கல்வி கற்று...

"மாபெரும் மஹான் ஆகிவிட்டார்கள் ..!"

தன்னுடைய ஷைக்

ஜஃபர் சாதிக்-ரஹ்

அவர்களின் உத்தரவு படி...

முப்பது

வருஷத்துக்கு பிறகு...

ஊர் திரும்புகிறார்கள். ..

எல்லோரும்

உறங்கிவிட்ட

இரவுநேரம்...

வீட்டுக்கதவை

தட்டப்போகையில்...

வீட்டுக்குள் அழுகைக் குரல்...

"யா அல்லாஹ்!

என் மகனை

உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்...

நீதான்

பாதுகாப்பு...!"

என

இன்னும்

தன் தாய்

தனக்காக துஆ செய்வதைக் கேட்டு...

"ஹோ.. என

சப்தமிட்டு

அழுகிறார்கள்.!"

மகனின் குரல் கேட்டு..

தட்டுத் தடுமாறி

அந்தத் தாய்

கதவை திறந்ததும்....

"தாயின் காலைப் பிடித்து

கதறி அழுகிறார்கள்.!"

"உன் நினைவால்

அழுது.. அழுது

உன்னைப் பார்க்க கூட

எனக்கு பார்வை இல்லை மகனே..!"

என அந்தத்தாயும் அழுகிறார்.

தாயின் துஆவால்

மாபெரும் குத்பாக மாறிய

அவர்கள் தான்

அபாயஜீதுல் பிஸ்தாமி-ரஹ்

ஆவார்கள்.


"இறைநேச சூட்டில் குளிரான சுடுநீர்"

அவர் ஒரு மன்னர் தன் புற வாழ்வு இன்பத்தில் உள்ள போலித்தனத்தை உணர்ந்து தன் அக வாழ்வும் மறுமை வாழ்வும் சிறக்க தன் ஞான குருநாதரை தேடி பல ஊர்களுக்கு அலைந்தும் அவர்களுக்கான ஞான குரு நாதரை கண்டாரில்லை,

அப்பொழுது பிரபலமான இறைநேசப் பெருந்தகை ஒருவர் பை அத் தருவதாக கேள்விப்பட்டு அவர்களின் இல்லம் நோக்கி சென்றார்கள் அந்த நேசர் அங்கு சென்றால் மிகப்பெரிய கூட்டமாக பலர் வரிசையாக நின்றனர்

அவர்களுடன் அந்த நேசரும் நின்றார்கள் பை அத் பெற உள்ளே செல்பவர்கள் எல்லாம் தலை தெறிக்க வெளியே ஓடு வதுமாக இருந்தார்கள்.

இறுதியாக அந்த நேசரை அழைத்தார் அந்த பெருந்தகை அந்த நேசரைப்பார்து எதற்காக வந்தீர்கள் எனக் கேட்க உங்களிடம் ஆன்மீக சீடராக இணைய என அந்த நேசர் சொல்ல சரி நான் பை அத் தருகிறேன் அதற்கு ஒரு நிபந்தனை இதோ சூடாக்கி கொண்டு இருக்கும் இந்த கொதிக்கும் நீர் நிரைந்த இந்த தொட்டியில் மூழ்கி குளித்து பின் வந்தால் நான் உங்களுக்கு பை அத் தருகிறேன் என்று சொல்ல அப்போது தான் அங்கு அடுப்பு மூட்டி எரிந்தி கொண்டு இருக்க அதில் மிகப்பெரிய தொட்டியில் நீர் நிரப்பப்பட்டு அது கொதித்து கொண்டு இருந்தது அப்போது தான் அந்த நேசருக்கு நினைவு வந்தது பை அத் பெற சென்ற அனைவரும் தலை தெறிக்க ஏன் ஓடினார்கள் என்று.

என்றாலும் அந்த நேசர் ஓடவும் இல்லை தயங்கவும் இல்லை அந்தப் பெருந்தகை கூறியது தான் தாமதம் பாய்து குதித்தார்கள் அந்தக் கொதிக்கும் சுடு தண்ணீரில் பின் மூழ்கி குளித்து எழுந்து அந்தப் பெருந்தகையிடம் பை அத் பெற்றார்கள் .

சுடு தண்ணீரில் மூழ்கிய அந்த நேசர் கூறினார்கள் அது பார்பதற்கு தான் சுடு நீராக கொதித்தது நான் அதில் குதித்து மூழ்கிய போது இறைவன் அதை குளிர்ந்த நீராக்கி விட்டான் என்று !

இந்த சோதனை ஏன் அந்த பெருந்தகை இடம் கேட்ட போது உண்மையான இறைநேசத்தின் மேல் உள்ள உள்ளக் காதல் சூடானாது அந்த கொதி நீரின் சூட்டை அனைத்து விடும் என்று கூறினார்கள்

இந்தகைய பேரு பெற்ற அந்த நேசர் தான் திருச்சி மாவட்டத்தில் அடக்கமாகி உலக மெங்கும் ஆன்மீக அரசாட்சி நடத்தும் ஹழ்ரத் தாதா தப்லே ஆலம் நத்ஹர் வலி பாதுஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் ஆவார்கள்

கொதி நீரில் குளிக்க வைத்து சோதித்த அந்த பெருந்தகை ஹழ்ரத் சையத் ஷா சைகு ஜொலூஃகி பர்வாஸ் கலந்தர் ஹுசைனி சுஹ்ஹரவர்த்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள்..


"எல்லாமே அல்லாஹ்தான்"

கௌதுல் ஆலம் முஹ்யிதீன் அப்துல் காதர் ஜீலானி ( ரஹ்) அவர்களிடம் ஒரு மனிதர் கேட்டார்..

நீங்கள் இந்த அளவு அந்தஸ்தை அடையவதர்கும், அல்லாஹ்வை நெருங்குவதற்கும் உங்கள் தொழுகையா, நோன்பா நீங்கள் செய்த அபரிவிதமான அமல்களா எந்த அமல் காரணமாக 

இருந்தது என கேட்டார்.

அதற்கு கௌதுல் ஆலம் அவர்கள் சொன்ன வார்த்தை

என் தொழுகையோ நோன் போ நான் செய்த அபரிவிதமான அமல்கலோ எதுவாக இருப்பினும் முதலில் நான் இந்த நிலையை அடைய காரணம் بالكرم அல்லாஹ்வின் அருள் என சொன்னார்கள்..

அவன் என்னை நாடாவிடில் நான் இந்த நிலையை அடக்கிந்திருக்க முடியாது என்றார்கள்..

ஆம், உண்மை தான் நாம் ஒரு சுப்ஹானல்லாஹ் சொல்வேண்டுமாயின் அதற்க்கும் அல்லாஹ் நாடியிருக்கனுமே..!

வலிமார்களின் நிலை இதுதான் தான் எதுவும் செய்ய வில்லை, தன்னால் எதுவும் நிகழவில்லை எல்லாமே அல்லாஹ்தான் என்பார்கள்..

அவர்களே அல்லாஹ்வாலக்கள்..

இப்படி இறை நேசர்களின் வாழ்வில் அற்புதம் வாழ்க்கை முழுவதும் நிரம்பி வழிகிறது..

நாமும் அந்த இறை நேசர்களை நேசிக்கும் நேசர்களாக ஆக்கி அருள்புரிவானாக...

அவர்களின் பெயரில் நடக்கும் அனாச்சாரங்களை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் விலக்கி, இறைநேசர்களின் உண்மையான அந்தஸ்தையும், மகிமையையும் நம் நெஞ்சில் ஏந்தி வாழக்கூடிய நன்மக்களாக வல்ல இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக..

ஆமீன்.

Thursday, 19 November 2020

20/11/2020 ஜூம்ஆ பயான் குறிப்புகள்:- இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற்ற வியாபாரிகளாவோம்

الحمد لله، الحمد لله رب العالمين، والصلاه والسلام على رسوله المرسلين، وعلى اله واصحابه اجمعين، اما بعد، فقال الله تعالى في القران العظيم، والقران المجيد، اعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم

قال الله تعالى في القرآن الكريم: ((يا أيها الناس كُلوا مما في الأرض حلالاً طيبًا ولا تتَّبعوا خُطُوات الشيطان إنه لكم عدوٌ مبين)) سورة البقرة. 

 و قال النبي صلى الله عليه وسلم، وعن أبي سعيدٍ الخدري أن النبي صلى الله عليه وسلم قال:((التاجر الصدُوق الأمين مع النبيين والصديقين والشهداء)) رواه الترمذي


மனிதன் தனக்கு தேவையான ஒன்று பிறரிடம் இருக்கும் போது அதை அவனிடம் கேட்கிறான். பேரம் பேசுகிறான். அதற்கு ஈடாக தன்னிடம் உள்ளதை கொடுக்கிறான். இப்படி உருவானதுதான் வியாபாரம். ஆதிகாலத்தில் பண்ட மாற்றமாக அதாவது பொருளுக்கு பொருள் என்று இருந்துவந்த வியாபாரம் காலப்போக்கில் பணத்திற்கு பொருள் என்ற வியாபார முறைக்கு மாறிவிட்டன.
பணம் இருந்தால் போதும் எதையும் வாங்கலாம் என்ற அளவுக்கு பணம் வியாபாரத்தில் முக்கியத்துவம் பெற்று விட்டன. இதனால் வியாபார முறைகளும் மாறிவிட்டன. மாறிவிட்ட வியாபார முறைக்கு ஏற்ப மனிதனும் மாற்றிக்கொள்ள முயற்சிகிறான்.

"நபிமார்களின் வியாபாரம்"

ஒவ்வொரு நபியும் வாழ்வாதாரத்திற்காக ஏதாவது ஒரு வேலையை செய்தார்கள்.
 
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் விவசாயம் செய்தார்கள்.
 
நபி இத்ரீஸ் அலைஹிஸ்ஸலாம் தையல் வேலை செய்தார்கள்.
 
நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் உருக்கு சட்டை செய்து விற்றார்கள்.
 
எல்லா நபிமார்களும் ஆடு மேய்த்தார்கள்.நம்முடைய நபியும் ஆடு மேய்த்துள்ளார்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியாபாரமும் செய்துள்ளார்கள். எனவே தான் வியாபாரம் செய்வது வாழ்வாதாரத்தை தேடுவதற்கு மிக சிறந்த வழி என்றார்கள். 
 
நுபுவ்வத் கிடைப்பதற்கு முன்பு அன்னை கதீஜா ரழியல்லாஹு அன்ஹா அவர்களின் பொருட்களை வியாபாரம் செய்வதற்கு ஷாம் தேசம் சென்றார்கள். அதில் மிகப் பெரிய இலாபம் ஈட்டினார்கள். 

 அதை போன்று அப்துல்லாஹ் இப்னு ஸாயிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடன் வியாபாரத்தில் பார்ட்னர் ஷிப் ஆக இருந்தார்கள். இதை பற்றி அப்துல்லாஹ் இப்னு ஸாயிப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள், அறியாமை காலத்தில் முஹம்மது ஸல்லல்லாஹு அவர்களுடன் வியாபார பார்ட்னராக இருந்தேன். எப்பொழுது மதீனா தய்யிபாவிற்கு வந்தேனோ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், என்னை தெரியுமா? என்று கேட்டார்கள். நான் சொன்னேன் ஏன் தெரியாது?!  "என்னுடைய பார்ட்னர்களில் மிக சிறந்த பார்ட்னராக இருந்தீர்கள். எந்த மோசடியும் செய்யாதவர், எந்த தர்க்கம் செய்யாதவர். (முஸ்னத் அஹ்மத்)

அதே போல் ஸஹாபாக்களும், இமாம்களும், பல இறைநேசர்களும் முத்தக்கீன்களாகவும் ,இஸ்லாமிய அழைப்பாளர்களாகவும் அதே சமயம் வியாபாரம் செய்யும் நேர்மையான வியாபாரிகளாகவும் இருந்தார்கள்.

"உழைத்து உண்பதே சிறந்த செயல்"

தன்னுடைய கையால் உழைத்து சாப்பிடும் உணவு மிகவும் சிறந்தது. நபி தாவுத் (அலை) தன்னுடைய கையால் உழைத்து சாப்பிடக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். (நூல் – புஹாரி)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள். “”பிறரிடம் யாசகம் கேட்பதை விட ஒருவர் தமது முதுகில் விறகுக் கட்டைகளைச் சுமந்து விற்கச் செல்வது சிறந்தது ஆகும். அவர் யாசிக்கும் போது யாரும் கொடுக்கவும் செய்ய லாம், மறுக்கவும் செய்யலாம்” நபிமொழி செய்தி யாளர்கள் : அபூஹுரைரா(ரழி) மற்றும் ஸுபைர் பின் அவ்வாம்(ரழி), ஆதாரம்: புகாரி, ஹதீஃத் எண் : 2075, 1472

நபிகள் நாயகம் அவர்களிடம் ஓர் இளைஞர் வந்து யாசகம் கேட்டார். அவனைப் பார்த்த நபியவர்கள் ‘உன்னுடைய வீட்டில் ஏதேனும் இருக்கிறதா?’ எனக் கேட்டார்கள். ‘ஒரே ஒரு போர்வைதான் உள்ளது’ என்று அந்த இளைஞர் கூறினார். அந்த போர்வையை கொண்டு வரச் செய்த நபியவர்கள், அந்த போர்வையை ஏலம் விட்டார்கள். அந்த பணத்தைக் கொண்டு கோடாரி ஒன்றை வாங்கி அந்த இளைஞரிடம் கொடுத்துவிட்டு ‘காட்டிற்கு சென்று விறகு வெட்டிப் பிழைத்துக்கொள். யாசகம் கேட்பதைவிட அதுதான் சிறந்தது’ என்று கூறி அந்த இளைஞரை அனுப்பி வைத்தார்கள்..

இப்படி உழைத்து ,வியாபாரம் செய்து தன் ரிஸ்க்கை தேடுவது, பிறர் உழைப்பில் சாப்பிடுவதை காட்டிலும், யாசகம் செய்து உண்பதை விடவும் சிறந்தது என்கிறது நம் மார்க்கம்.


குர்ஆனில் ஏறத்தாழ 32 இடங்களில் ஜகாத் கொடுப்பதற்கு கட்டளையிடப்பட்டுள்ளது அல்லது ஆர்வமூட்டபட்டுள்ளது.

அதை போன்று 16 இடங்களில் சதகா செய்ய ஆர்வமூட்டபட்டுள்ளது, சதகா செய்பவரை புகழப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு மாற்றமாக குர்ஆனில் எந்த இடத்திலும் ஜகாத் வாங்க சொல்லியோ, சதகா வாங்க சொல்லியோ வரவில்லை. 

மேலும் "நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மேலிருக்கும் (கொடுக்கும்) கை, கீழிருக்கும் (வாங்கும்) கையை விட சிறந்ததது."

இதிலிருந்து ஒரு மனிதன் வியாபாரத்தின் மூலமோ, அல்லது இஸ்லாம் ஆகுமாக்கிய ஏதாவது ஒரு வழியின் மூலமாகவோ பிறருக்கு கொடுக்கும் நிலைக்கு தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று குர்ஆன் இன்னும் ஹதீஸ் வழிகாட்டுகிறது.

வாழ்வாதாரத்தை தேடுவதற்கு ஆகுமாக்கப்பட்ட பல வழிகள் இருந்தாலும்,அவற்றில் அதிக பரக்கத் உடையது வியாபாரம் செய்வதாகும். 

எனவே தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நேர்மையான முறையில் நடக்கும் வியாபாரத்தில் அல்லாஹ்வின் உதவி உள்ளது.

அந்த வியாபாரமும், அதை செய்யும் வியாபாரியும் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்க கூடாது என்று மார்க்கம் சில வழிமுறைகளை சொல்லி சொல்லிக்கொடுக்கிறது.

அதன் படி நமது வியாபாரத்ததை அமைத்து கொண்டால் இம்மையில் பரக்கத்தோடும், மறுமையில் நல்லோர்களுடன் இருக்கவும்   நம் வியாபாரம் காரணமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

"வியாபாரத்தில் ஏமாற்றுபவர் நம்மை சார்ந்தவர் இல்லை"

إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: أَخْبَرَنِي الْعَلَاءُ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ عَلَى صُبْرَةِ طَعَامٍ فَأَدْخَلَ يَدَهُ فِيهَا، فَنَالَتْ أَصَابِعُهُ بَلَلًا فَقَالَ: «مَا هَذَا يَا صَاحِبَ الطَّعَامِ؟» قَالَ أَصَابَتْهُ السَّمَاءُ يَا رَسُولَ اللهِ، قَالَ: «أَفَلَا جَعَلْتَهُ فَوْقَ الطَّعَامِ كَيْ يَرَاهُ النَّاسُ، مَنْ غَشَّ فَلَيْسَ مِنِّي»

நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் (சந்தையில்) ஒரு உணவு குவியலை கடந்து சென்றார்கள். அதில் தன் கையை (உள்ளே) நுழைத்த பார்த்தபோது அது ஈரமாக இருந்தது. அந்த உணவு பொருள் உரிமையாளரிடம், “ இது என்ன என்று கேட்டார்கள்”   அதற்கு அவர் “ இது மழையின் காரணமாக ஈரமாகிவிட்டது அல்லாஹ்வின் தூதரே என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் சொன்னார்கள்  “ இதை மக்கள் பார்க்கும்படி உணவிற்கு மேலே வைத்திருக்க கூதாதா? யார் நம்மை ஏமாற்றுகிறாரோ அவர் நம்மை சார்ந்தவர் இல்லை”

ஏமாற்றும் வியாபாரிக்கு மார்க்க அங்கீகாரம் ரத்து.

"அளவை,நிறுவைகளில் மோசடி செய்பவர் நல்ல வியாபாரி இல்லை"

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ (1) الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ (2) وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ (3)
1.(எடையிலும், அளவிலும்) குறைவு செய்கிறவர்களுக்குக் கேடு உண்டாவதாக!
2. அவர்கள் எத்தகையோரென்றால் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்குவார்கள்.
3.ஆனால் அவர்களுக்குத் தாங்கள் அளந்து கொடுத்தாலும்  அல்லது அவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் குறைவு செய்(து நஷ்ட முண்டாக்கு)வார்கள்.
[ سورة المطففين]

(இந்த ஆயத் மதீனா வாசிகளின் சம்பந்தமாக இறங்கிய தாகும்) அன்றைய மதீனா வாசிகளின் பொதுவான நடைமுறையாகும் அதாவது வியாபாரிகள்  மக்களிடமிருந்து ஏதேனும பொருட்களை வாங்கும் பொழுது சரியாக நிறுத்து (மோசடி செய்யும் விதமாக கூடுதலாக பெற்றுக் கொள்வார்கள்) வாங்குவார்கள். ஆனால் ஏதேனும் பொருட்களை மக்களிடம் (விற்பனை செய்யும்) கொடுக்கும் பொழுது நிலுவையில் குறை செய்வார்கள் (மோசடி செய்வார்கள்) எப்பொழுது அவர்களின் சம்பந்தமாக எச்சரிக்கை செய்யும் விதமாக ஆயத் இறங்கியதோ, அப்போதே அவர்கள் தங்களுடைய தீய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு நியாயமான முறையில் வியாபாரம் செய்யக் கூடியவர்களாக மாறினார்கள் .இன்று வரையிலும் மதீனாவில் கொடுக்கல்-வாங்கலில் சரியாகவும் நீதமாகவும் இருக்கிறார்கள்.
(گلدستہ تفاسیر :  (٧/٥٦٥)

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “(அளவை, நிறுவை என) இரண்டு விஷயங்களில் பொறுப்பேற்றுள்ளீர்கள். இதில்தான் உங்களுக்கு முன் இருந்த சமுதாயத்தினர் அழிந்தனர்” என்று எச்சரித்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரலி) – திர்மிதீ).*

நபி (ஸல்) அவர்கள் இந்த ஹதீஸில் சொன்ன அந்த அழிந்து போன சமுதாயத்தினர் யார் தெரியுமா? ஷுஐப் நபியின் சமுதாயத்தினர். மத்தியன்வாசிகள் அதாவது தோப்புகளில் வசித்தவர்கள் என்று அழைக்கப்படும் அந்த சமுதாயத்தினர். இந்த மத்தியன்வாசிகள் அளவையிலும் நிறுவையிலும் மோசடி செய்தனர்.
இம்மக்களைத் திருத்துவதற்காக அல்லாஹ் ஷுஐப் நபியை தன் தூதராக தேர்ந்தெடுத்து அச்சமுதாயத்திற்கு அனுப்பினான். ஷுஐப் நபி அல்லாஹ் காட்டித்தந்த ஏகத்துவக் கொள்கையை விளக்கி, அவர்கள் செய்துவரும் அளவை நிறுவை மோசடியை விட்டுவிடுமாறு எச்சரித்தார்கள். ஆனால் அம்மக்கள் அவரைப் பின்பற்றவில்லை. எனவே அல்லாஹ் அச்சமுதாயத்தை அழித்தான்.

ஷுஐப் நபி தன் சமுதாயத்தை எச்சரித்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில்

وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا‌  قَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ مَا لَـكُمْ مِّنْ اِلٰهٍ غَيْرُهٗ‌  قَدْ جَآءَتْكُمْ بَيِّنَةٌ مِّنْ رَّبِّكُمْ‌ فَاَوْفُوا الْكَيْلَ وَالْمِيْزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ اَشْيَآءَهُمْ وَلَا تُفْسِدُوْا فِى الْاَرْضِ بَعْدَ اِصْلَاحِهَا‌  ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‌ ‏
மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) “என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை; நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது; அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 7:85)

 அளவையும், நிறுவையையும் நிறைவாக கொடுங்கள். மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள் என எச்சரித்தார். ஆனால் அம்மக்கள் அவருடைய பேச்சை கேட்கவில்லை.
அச்சமுதாயத்தில் அல்லாஹ்வை ஏற்கமறுத்தவர்கள் கூறினார்கள். ஷுஐபைப் பின்பற்றினால் நீங்கள் உங்கள் வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிடுவீர்கள். அவரைப் பின்பற்றாதீர்கள் என்று கூறினார்கள். அவர்கள் செய்துவந்த இந்த அளவை நிறுவை மோசடிக்காக அல்லாஹ் அவர்கள் மீது பூகம்பத்தை ஏற்படுத்தி அழித்துவிட்டான். அளவை நிறுவை மோசடி செய்யும் வியாபாரிகள் இந்த சமுதாயத்திற்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதை உணரவேண்டும்.

"பதுக்கி வைத்து பின் விலையேற்றி விற்பவர் முஸ்லிமான வியாபாரி கிடையாது"

عن معمر بن عبد الله- رضي الله عنه- عن رسول الله صلّى الله عليه وسلّم قال: «لا يحتكر إلّا خاطىء»  مسلم

நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “பதுக்கல் செய்பவன் பாவியாவான்” இன்னொரு அறிவிப்பில் “பாவியைத் தவிர வெறெவனும் பதுக்கமாட்டான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

عن عمر- رضي الله عنه- قال
الجالب مرزوق، والمحتكر محروم،

உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைக்காமல் அவற்றை கடைவீதிக்கு கொண்டு வருபவன் அல்லாஹ்வின் அருளுக்கு உரித்தானவன்! மேலும், அவனுக்கு அல்லாஹ் வாழ்வாதாரத்தையும் வழங்குவான். இன்னும், தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத் )

முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “தேவையான பொருட்களைப் பதுக்கி வைப்பவன் எவ்வளவு கெட்டவனாக இருக்கின்றான்! அல்லாஹ் பொருள்களின் விலையை மலிவாக்கி விட்டாலோ இவன் துக்கப்படுகின்றான். விலை ஏறிவிட்டாலோ ஆனந்தம் அடைகின்றான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள். ( நூல்: மிஷ்காத் )

"பஞ்சப் பட்டினியான நேரத்தில் தம் வியாபார பொருள் எதையும் பத்துக்காமல், அனைத்தயும் தர்மம் செய்த உத்தம வியாபாரி உஸ்மான் ரலி யல்லாஹு அன்ஹு"


"வியாபாரம் செய்பவர் மார்க்கரீதியாக வியாபார சட்டங்களை அறிந்திருப்பது அவசியம்"

ஹஜ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு மனிதரை அழைத்து கடைவீதிக்கு போக சொன்னார்கள். மேலும் யாருக்கு கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாதோ அவரை கடைவீதியிலிருந்து வெளியாக்குங்கள் என்றார்கள்.

இன்னொரு அறிவிப்பில் ஹஜ்ரத் உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாமல் வியாபாரம் செய்ய உட்கார்ந்திருப்பாரோ அவரை சாட்டையால் அடிப்பார்கள். மேலும் சொல்வார்கள் நம்முடைய கடைவீதிகளில் வட்டி எது என்று தெரியாதவரை உட்கார விடாதீர்கள்.

இமாம் மாலிக் (ரஹ்) அதிகாரிகளை அழைத்து வியாபாரிகள், இன்னும் கடைவீதிகளில் இருக்கக்கூடிய மக்களை இமாம் அவர்களுக்கு முன் கொண்டு வர சொல்வார்கள். இமாம் அவர்கள், அவர்களிடம் கேள்வி கேட்பார்கள். யாருக்கு கொடுக்கல், வாங்கல் உடைய சட்டம் தெரியாதோ இன்னும்  ஹலால் இன்னும்  ஹராமிற்கு  மத்தியில் வித்தியாசம் தெரியாதோ அவரை கடைவீதிகளிலிருந்து வெளியாக்கிவிடுவார்கள். மேலும் அவரிடம் முதலில் கொடுக்கல், வாங்கல் பற்றி சட்டங்களை கற்றுக் கொள்ளுங்கள். பிறகு வியாபாரம் செய்வதற்கு உட்காருங்கள் என்பார்கள். ஏனென்றால் சட்டம் தெரியாமல் வியாபாரம் செய்தால் வட்டியை சாப்பிடுவீர்கள் என்றார்கள்.

நம் எந்த வியாபாரம் செய்கிறோமோ அது சம்பந்தமாக மார்க்கத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளளது என்பதை தெரிந்து வைப்பது கட்டாய கடமை. இல்லையென்றால் ஹராம் கலந்து விட்டால் நம்முடைய இபாதத்துகள், துஆக்கள் ஒப்புக் கொள்ளப்படாது...

"வியாபாரத்தை அதிகாலை ஆரம்பிப்பது"

 ஹஜ்ரத் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி துஆ செய்தார்கள்,
 "اللهم بارك لأمتي في بكورها
 "யா அல்லாஹ்! என்னுடைய உம்மத்திற்கு அதிகாலையில் (செய்யப்படும் வேலைகளில்) பரக்கத் செய்வாயாக.

மேலும் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் படையை அனுப்புவதாக இருந்தால் அதிகாலை நேரத்தில் அனுப்புவார்கள்.

ஹஜ்ரத் ஸஹ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் வியாபாரியாக இருந்தார்கள். மேலும் தன்னுடைய வேலையாட்களை வியாபாரத்திற்கு அனுப்பும் சமயம் அதிகாலையில் அனுப்புவார்கள். இதனால் அவருடைய செல்வம் அதிகரித்தது.

நாமும் நம்முடைய வியாபாரத்தை, கடைகளை சுப்ஹ் தொழுகைக்கு பின் ஆரம்பித்தால், திறந்தால் அதில் மிகப் பெரிய பரக்கத் ஏற்படும். நம்முடைய பகுதிகளில் நடைமுறை இல்லையென்றாலும் சுன்னத் என்ற எண்ணத்தில் செய்தால் நிச்சயம் அல்லாஹ் உதவி செய்வான்.

"நம் முன்னோர்கள் வியாபாரத்தில் ஹலால், ஹராமை பேணிய விதம்"

ஹப்ஸ் இப்னு கியாஸ் என்பவர் இமாம் அபூ ஹனீபா (ரஹ்) அவர்களுடன் சேர்ந்து வியாபாரம் செய்து வந்தார். ஒரு தடவை இமாம் அவர்கள், ஹப்ஸ் இப்னு கியாஸிடம் வியாபார பொருட்களை கொடுத்து வியாபாரம் செய்வதற்கு வெளியே அனுப்பி வைத்தார். மேலும், இதையும் சொல்லி அனுப்பினார்கள். வாடிக்கையாளர் யாராவது இதை வாங்கினால் இதிலுள்ள குறையை அவரிடம் சொல்லவேண்டும்.
 
ஆனால், ஹப்ஸ் இப்னு கியாஸ் அதை விற்கும் சமயம் அதிலுள்ள குறையை  வாங்குபவரிடம் சொல்ல மறந்து விட்டார். விற்ற பணத்தை கொண்டு வந்து இமாம் அவர்களிடம் கொடுக்கும் சமயம் இமாம் அவர்கள், வாங்கியவரிடம் அதிலிருந்த குறையை சொன்னீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு ஹப்ஸ் இப்னு கியாஸ் குறையை சொல்ல மறந்து விட்டேன் என்று தன் தவற்றை ஒத்துக் கொண்டார். உடனே , இமாம் அவர்கள் அதை வாங்கிய நபரையாவது ஞாபகம் இருக்கிறதா? என்று கேட்டார். அதற்கும் ஞாபகம் இல்லை என்று சொல்லி விட்டார்.

 இமாம் அவர்கள் அந்த பொருளை விற்று கிடைத்த 30,000 தீனாரையும் சதகா செய்து விட்டார்கள்.

இமாம் அவர்கள் தன்னுடைய வியாபார கூட்டாளி தெரியாமல் செய்த தவறுக்காக, அந்த பொருளை விற்று வந்த மிகப் பெரிய தொகையை ஹராம் கலந்து விடுமோ என்ற ஒரே காரணத்திற்காக முழுவதையும் சதகா விட்டார்கள்.

ஆனால் நம்முடைய நிலை, வியாபாரம் செய்யும் சமயம் பொருளில் குறை இருந்தும், அதை தெரிந்திருந்தும் சொல்லி விற்கிறோமா?!.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

من باع عيبا لم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه (رواه إبن ماجه)
             நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் யார் குறையுள்ள பொருளை, (அதை வாங்குபவருக்கு அதிலுள்ள) குறையை சொல்லாமல் விற்றுவிடுவாரோ, அவரின் மீது அல்லாஹ்வின் கோபம் இருந்து கொண்டேயிருக்கும். மலக்குமார்கள் அவரை சபித்துக் கொண்டேயிருப்பார்கள்.

குறையை சொல்லாமல் விற்கும் வியாபாரம் அதன் மூலம் வரக்கூடிய பணம் ஹலாலா?அல்லது ஹராமா? என்பதை கவனிக்கிறோமா?

مظفر بن سهل قال: سمعت غيلان الخياط يقول: اشترى سري السقطي كرّ لوز بستين ديناراً وكتب في رونامجه ثلاثة دنانير ربحه، فصار اللوز بتسعين ديناراً، فأتاه الدلاّل فقال له: إنّ ذلك اللوز أريده، فقال: خذه، فقال: بكم؟ قال: بثلاثة وستين ديناراً، قال له الدلاّل: إنّ اللوز قد صار الكرّ بسبعين ديناراً، قال له السري: قد عقدت بيني وبين الله عقداً لا أحله لست أبيعه إلاّ بثلاث وستين ديناراً، قال له الدلاّل: وأنا قد عقدت بيني وبين الله عقداً لا أحله، أن لا أغشّ مسلماً، لست آخذ منك إلاّ بسبعين ديناراً، قال: فلا الدلاّل اشترى منه ولا سري باعه

ஸிர்ரீ ஸிக்தீ (ரஹ்) அவர்கள் மாபெரும் வணிகராகத் திகழ்ந்தார்கள். ஒரு சமயம் 60 தீனார் கொடுத்து ஒரு கூஜாவை விலைக்கு வாங்கி தங்களது கடையில் விற்பனைக்காக வைத்தார்கள். மேலும், ”அன்றைய நாட்குறிப்பில் 60 தீனாருக்கு விற்பனை செய்வதற்காக வாங்கிய கூஜாவிற்கு 10 தீனாருக்கு அரை தீனார் வீதம் மூன்று தீனார் லாபமாக வைத்து 63 தீனாருக்கு அதை விற்க வேண்டும்” என்று எழுதி வைத்தார்கள்.

கொஞ்ச நாட்கள் கழித்து கூஜாவின் விலை ஏறியது. இந்த நிலையில், ஒரு கிராமவாசி கடைக்கு பொருள் வாங்க வந்தார். வந்தவரை கூஜாவின் அழகு ஈர்த்தது. ஸிர்ரீ (ரஹ்) அவர்களிடம் தனக்கு அந்த கூஜா வேண்டும். எவ்வளவு விலை? என்று கேட்டார்.
ஸிர்ரீ (ரஹ்) அவர்கள், கிராமவாசியிடம் 63 தீனார் அதன் விலை, அதில் 3 தீனார் எனக்கான லாபம் என்றார்கள்.

அதற்கு அந்த கிராமவாசி சிரித்தவராக, பிழைக்கத் தெரியாதவராக இருக்கின்றீர்களே! இதன் விலை மற்ற கடைகளில் எவ்வளவு தெரியுமா? 90 தீனார்.

இருந்து விட்டு போகட்டும்! நான் வாங்கும் போது 60 தீனார் தான், எனக்கான லாபம் 3 தீனார் தான் நான் இதை வாங்கும் போதே இன்ன விலைக்குத் தான் விற்க வேண்டும் என தீர்மானித்து விட்டேன். மற்ற கடைகளின் விலை விபரமோ, விலையேற்றமோ எனக்கு அவசியமில்லை.

அதற்கு, அந்த கிராமவாசி வெளியில் 70 தீனாருக்கு விற்பனையாகும் ஒரு பொருளை 63 தீனாருக்கு வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை. அதுவும் சக முஸ்லிம் ஒருவரிடம் இப்படி குறைந்த விலைக்கு வாங்குவதற்கு எனக்கு விருப்பமும் இல்லை. எனவே, 70 தீனாருக்கு தர முடியும் என்றால் அந்த கூஜாவை வாங்கிச் செல்கின்றேன் என்று உறுதியாகக் கூறினார்.

அதைக் கேட்ட ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் “63 தீனாரை விட கால் தீனார் கூட கூட்டி வாங்கமாட்டேன், வேண்டுமானால் 70 தீனார் கொடுத்து மற்ற கடைகளில் நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்! என்றார்கள்.

அந்தக்கிராமவாசியும் இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. ஸிர்ரீ (ரஹ்) அவர்களும் விட்டுக் கொடுக்கவில்லை.

இறுதியில் கிராமவாசி வாங்கவும் இல்லை, ஸிர்ரீ (ரஹ்) அவர்கள் விற்கவும் இல்லை.
(நூல்: இஹ்யா உலூமுத்தீன், கிதாபுல் பைஉ )

இது போல ஏராளமான சமபவங்கள் நம் முன்னோர்களின் வாழ்க்கையில் குவிந்து கிடக்கின்றன..

நாம் உலகில் வியாபாரம் செய்யும் சாதாரணமான வியாபாரியாக கடந்து செல்லாமல் உண்மையான, நேர்மையான சுவனத்தை ஆவல் கொண்ட வியாபாரியாக இஸ்லாம் அங்கீகரித்த வியாபாரியாக வாழ வேண்டும்.

"தவறான வியாபாரங்களின் விளைவுகள்"

1, அருள்வளம் நீக்கப்படும்

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ ، حَدَّثَنَا شُعْبَةُ ، عَنْ قَتَادَةَ ، عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ رَفَعَهُ إِلَى حَكِيمِ بْنِ حِزَامٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم

الْبَيِّعَانِ بِالْخِيَارِ مَا لَمْ يَتَفَرَّقَا ، أَوْ قَالَ حَتَّى يَتَفَرَّقَا – فَإِنْ صَدَقَا وَبَيَّنَا بُورِكَ لَهُمَا فِي بَيْعِهِمَا وَإِنْ كَتَمَا وَكَذَبَا مُحِقَتْ بَرَكَةُ بَيْعِهِمَا

அருள்வளம் நீக்கப்படும்
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக்கத்) அளிக்கப்படும்!
குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்!
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (2079)

2, பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படாமல் போகுதல்
இந்த சம்பாத்தியம் இறைவனின் கோபத்தை மற்றும் பெற்றுத்தராமல் நாம் செய்யும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையான தையே அவன் ஏற்கின்றான்.
அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளையிட்டுள்ளான்” என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்:

يٰۤـاَيُّهَا الرُّسُلُ كُلُوْا مِنَ الطَّيِّبٰتِ وَاعْمَلُوْا صَالِحًـا‌ ؕ اِنِّىْ بِمَا تَعْمَلُوْنَ عَلِيْمٌ

தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான், நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன்
(அல்குர்ஆன் 23:51)

يٰٓاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا کُلُوْا مِنْ طَيِّبٰتِ مَا رَزَقْنٰكُمْ وَاشْكُرُوْا لِلّٰهِ اِنْ کُنْتُمْ اِيَّاهُ تَعْبُدُوْنَ‏

“நம்பிக்கையாளர்களே! நாம் உங்க ளுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென் றால், அவனுக்கு நன்றி பாராட்டுங்கள்.
(அல்குர்ஆன் 2:172).

2393 – وَحَدَّثَنِى أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ حَدَّثَنِى عَدِىُّ بْنُ ثَابِتٍ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم

« أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ( يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ) وَقَالَ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ) ». ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِىَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ

பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். “அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி
“என் இறைவா, என் இறைவா’ என்று பிரார்த்திக்கிறார்.
ஆனால்,
அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக்கிறது;
அவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறது.
அவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறது.
தடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகையவருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?
”என்று கூறி னார்கள்.
நூல்: முஸ்லிம் (1844)

3, இறைவனுடன் போர்
பொருளை விரைவில் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் வட்டித் தொழிலைச் செய்பவர்கள் இறைவனிடம் போர் செய்யத் துணிந்தவர்களாக கணிக்கப்படுவார்கள்.

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اتَّقُوا اللّٰهَ وَذَرُوْا مَا بَقِىَ مِنَ الرِّبٰٓوا اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ
فَاِنْ لَّمْ تَفْعَلُوْا فَاْذَنُوْا بِحَرْبٍ مِّنَ اللّٰهِ وَرَسُوْلِهٖ‌ۚ وَاِنْ تُبْتُمْ فَلَـكُمْ رُءُوْسُ اَمْوَالِكُمْ‌ۚ لَا تَظْلِمُوْنَ وَلَا تُظْلَمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே!
அல்லாஹ்வை அஞ்சுங்கள்!
நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகட னத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்!
நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது.
நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
 (அல்குர்ஆன் 2 : 278, 279)

4, சாபத்திற்குரியோர்

அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங் கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத் தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? அந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
 (அல்குர்ஆன்86 : 1- 6)

5, நரகம் பரிசாகும்

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِىُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ – قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ – قَالَ أَخْبَرَنَا الْعَلاَءُ – وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ – عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِىِّ عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِى أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ

« مَنِ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ ».

நபி ஸல் அவர்கள், “யார் தன்னுடைய சத்தியத்தின் மூல மாக ஒரு முஸ்லிமின் பொருளை அநியாயமாக எடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தில் நுழையச் செய்கிறான்” என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (196)

"நபியவர்களின் சுபச்செய்தி"

நபி (ஸல்) அவர்கள் வியாபாரிகளைப் பற்றி கூறும் போது முழு உண்மையுடனும் நம்பிக்கையுடனும் வியாபாரம் செய்யும் விபாயாரி நபிமார்கள், உண்மையாளர்கள், சுஹதாக்களுடன் இருப்பார் என நவின்றார்கள். (நூல் – திர்மிதி)

மேலும் கூறினார்கள், அல்லாஹ்வைப் பயந்து பேணுதலைக்கடைபிடித்து நல்லது செய்து தன் வியாபாரத்தைக் கொடுக்கல் வாங்களில் மக்களுடன் நேர்மையாக வியாபாரம் செய்த வியாபாரிகளைத் தவிர மற்றைய வியாபாரிகள் கியாமத் நாளன்று பாவிகளாக எழுப்பப்படுவார்கள். (திர்மிதி)

நபியின் சுபச்செய்திக்கு உரித்தான வியாபாரிகளாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக..


ஆமீன்..

08/01/2021 ஜூம்ஆ குறிப்புகள்:- பேனுதலை கடைப்பிடிப்போம், பேரின்பத்தை பெற்றுக்கொள்வோம்

பேணுதலை கடைபிடிப்போம், பேரின்பத்தை பெற்றுகொள்வோம் أخرجه الترمذي (2442) ، وأحمد (1630) ، وابن حبان (722) عن الحسن بن علي رضي الله...